Kallakurichi | உயிருக்கு ஆபத்தான நிலையிலும் மருத்துவமனைக்கு வராத அவலம்..!! வீடு வீடாக சென்று மருத்துவக் குழுவினர் சிகிச்சை..!!
தமிழ்நாட்டை மட்டுமின்றி நாட்டையே உலுக்கிய விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34-ஐ தொட்டுள்ளது. இது மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு அடுத்த கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதாக 109 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர். அவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் இன்று காலை வரை 34 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மேலும், விஷச்சாராயம் அருந்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்கள், உடனடியாக சிகிச்சைக்கு வராமல் வீட்டிற்குள் இருந்து விட்டு கடைசி நேரத்தில் சிகிச்சைக்கு வருவதால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு விஷச்சாராய அருந்தி உயிரிழப்பு ஏற்பட்ட சுற்றுவட்டார கிராமங்களில் மருத்துவக்குழு அமைக்கப்பட்டு, வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேறு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டியிருப்பின் உடனடியாக செல்ல 32 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை உடனுக்குடன் பிரேதப் பரிசோதனை செய்து, உறவினர்களிடம் வழங்க 4 அரசு மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
Read More : ’மீண்டும் இப்படி ஒரு சம்பவமா’..? தமிழ்நாடு அரசுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்..!!