முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கள்ளக்குறிச்சி பலி எண்ணிக்கை 18ஆக உயர்வு…! மேலும் 10 பேர் கவலைக்கிடம்..!

11:25 PM Jun 19, 2024 IST | Kathir
Advertisement

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் சிலர் கும்பலாகச் சென்று கள்ளச்சாராயம் அருந்தி இருக்கிறார்கள். இதில் 6 பேர் உடல்நிலை பாதிப்புக்கு ஆளானதாகச் சொல்லப்படுகிறது. அவர்களில் கணேசன் மகன் பிரவீன்(29), தர்மன் மகன் சுரேஷ் (46), சேகர், ஜெகதீசன் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது. மேலும் மருத்துவமனைகளில் உள்ள 10 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் கள்ளச்சாராயம் விற்று வந்துள்ளார். இவர் பலமுறை கள்ளச்சாராய வழக்கில் சிறைக்கு சென்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கள்ளச்சாராயம் விற்று வந்த கோவிந்தராஜிடம் அப்பகுதி மக்கள் கள்ளச்சாராயம் வாங்கி குடித்ததால், வாந்தி மயக்கம் காரணமாக 80 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 5 பேர் உயிரிழந்த நிலையில் மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் பலி எண்ணிக்கை தற்போது வரை 18ஆக அதிகரித்துள்ளது. மேலும் 10 பேர் பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை சிபிசிஐடி வசம் ஒப்படைத்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து பதிவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்,"கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

Tags :
kallakurichiகள்ளக்குறிச்சி
Advertisement
Next Article