For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ரிலீஸ் தேதியுடன் வெளியான கல்கி 2898 AD போஸ்டர்.. மிரட்டும் பிரபாஸ்!

07:08 PM Apr 27, 2024 IST | Mari Thangam
ரிலீஸ் தேதியுடன் வெளியான கல்கி 2898 ad போஸ்டர்   மிரட்டும் பிரபாஸ்
Advertisement

பிரபாஸ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘கல்கி 2898ஏடி’ திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸுக்கு வெற்றி கொடுத்த படங்கள் என்றால் எதுவும் இல்லை. அடுத்தடுத்த சருக்களை சந்தித்து வந்த பிரபாஸ் இப்போது கல்கி 2898 ஏடி என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் சங்கமித்து இருக்கின்றனர்.

தெலுங்கில் இன்னொரு பிரம்மாண்டமான மூவியாக உருவாகியுள்ளது கல்கி 2898 ஏடி. நாக் அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பிரபாஸுக்கு ஜோடியாக தீபிகா படுகோனேவும், வில்லனாக கமல்ஹாசனும் நடித்துள்ளது கல்கி படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ஏற்கனவே இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. சமீபத்தில் அமிதாப் பச்சன் கேரக்டருக்கான கிளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், கல்கி 2898 ஏடி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்தப் படம் ஜூன் 27ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. இதுபற்றிய அப்டேட்டை போஸ்டருடன் வெளியிட்டுள்ளது கல்கி படக்குழு. அதில், பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் ஆகியோர் ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளனர். கமலின் இந்தியன் 2 திரைப்படமும் ஜூன் மாதம் வெளியாகிறது.

விக்ரம் படத்திற்கு பிறகு கமலின் படங்கள் வெளியாகாமல் இருந்த நிலையில் ஒரே மாதத்தில் கமலின் இரண்டு படங்கள் வெளியாவது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. புராண கால கதையை சயின்ஸ் பிக்‌ஷனுடன் இணைந்து இயக்கியுள்ள நாக் அஸ்வின், பிரபாஸுக்கு தரமான ஹிட் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Tags :
Advertisement