முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”கைதி 2 பண்ண வேண்டிய லோகேஷை கைது பண்ணி கூலி படம்”..!! ரஜினியை அட்டாக் செய்த ப்ளூ சட்டை மாறன்..!!

Famous film critic Blue Shirt Maran has posted a scathing attack on Rajinikanth on his X site.
03:40 PM Oct 05, 2024 IST | Chella
Advertisement

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அக்டோபர் 4ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில், நேற்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், தான் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என வாழ்த்திய அரசியல் நண்பர்களுக்கும், சினிமாத்துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்திருந்தார். இன்னும் சில வாரங்கள் ஓய்வுக்குப் பின்னர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

இந்நிலையில், பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தளத்தில் ரஜினியை கடுமையாக தாக்கிப் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ”ஆயத பூஜைக்கு வர வேண்டிய கங்குவாவை விரட்டி விட்டு.. என் படத்தை ரிலீஸ் செய்றேன். கைதி 2 பண்ண வேண்டிய லோகேஷை கைது பண்ணி கூலி படம் எடுக்க வைக்கிறேன். விஜய் பட டைரக்டர்கள் ARM, நெல்சன், லோகேஷை என் ப்ராஜக்ட்ல கொண்டு வந்தேன். என் அடுத்த டார்கெட் H.வினோத். எப்படி என் சாணக்ய தந்திரம்?" என பதிவிட்டுள்ளார்.

இவரது இந்தப் பதிவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் காட்டமாக பதிலடி கொடுத்து வருகின்றனர். மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை தொடர்ந்து காட்டமாக விமர்சிப்பதிலும், கலாய்ப்பதிலும் அதிக ஆர்வம் காட்டும் நபராக ப்ளூ சட்டை மாறன் இருக்கிறார்.

Read More : கொத்தனாருடன் கள்ளக்காதல்..!! முதல் காதலன் வேலைக்கு சென்றதும் 2-வது காதலனுடன் உல்லாசம்..!! கடைசியில் நடந்த பயங்கரம்..!!

Tags :
சினிமாநடிகர் ரஜினிகாந்த்ப்ளூ சட்டை மாறன்லோகேஷ் கனகராஜ்
Advertisement
Next Article