தென்காசியில் உடைந்த கடனாநதி அணை... வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர்...! மக்கள் கடும் அவதி...
தென்காசி மாவட்டத்தில் கடனாநதி அணை, கனமழை காரணமாக நிரம்பி உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அணையிலுள்ள தண்ணீர் வெளியேறி, சம்பங்குளம் பகுதியிலுள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் இந்த ஆண்டு மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் போதிய மழையின்றி வறண்ட வானிலை நிலவியது. வடகிழக்கு பருவமழையும் ஏமாற்றம் அளித்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. ஒரே நாளில் 50 செ.மீ கனமழை கொட்டித் தீர்த்தது. விடிய விடிய பெய்த கனமழையால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
ஒரு பக்கம் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. 85 அடி உயரம் உள்ள கடனாநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 13 அடி உயர்ந்து 71 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 390 கனஅடி நீர் வந்தது. 10 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில் தென்காசி அருகே உள்ள கடனா நதி அணையில் உடைப்பு ஏற்பட்ட உடைப்பு காரணமாக, குடியிருப்பு பகுதியில் கழுத்தளவு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
கடையம் அருகே உள்ள கடனாநதி அணை, கனமழை காரணமாக நிரம்பி உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அணையிலுள்ள தண்ணீர் வெளியேறி, சம்பங்குளம் பகுதியிலுள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் கழுத்தளவு வெள்ளநீர் செல்வதால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். அரசு உடனடியாக மீட்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்ன மக்களின் கோரிக்கையாக உள்ளது.