முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கச்சத்தீவு விவகாரம்..!! ஆர்டிஐ தகவல் அண்ணாமலைக்கு மட்டும் கிடைத்தது எப்படி..? கேள்வி எழுப்பும் காங்கிரஸ்..!!

04:11 PM Apr 01, 2024 IST | Chella
Advertisement

கச்சத்தீவு விவகாரத்தில் ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பிய எத்தனையோ பேருக்கு பதில் கிடைக்காத போது, அண்ணாமலைக்கு மட்டும் கிடைத்தது எப்படி என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் இப்ராஹீம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

திருச்சி மாவட்டம் தெப்பக்குளம் பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தி தொடர்பாளரும், மண்டல பொறுப்பாளருமான இப்ராஹீம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் கட்சியின் பணம் தற்போது திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.135 கோடியை சட்டவிரோதமாக அபகரித்துள்ளனர். இது முற்றிலும் பாஜகவின் பழி வாங்கும் செயல். இதே காலகட்டத்தில் 42 கோடி ரூபாய் வசூலித்த பாஜகவுக்கு எந்த ஒரு வரி விதிப்பும் அபராதமும் இல்லை” என்றார்.

மேலும், “கச்சத்தீவை பற்றி மிகவும் கவலைப்பட்டு பேசும் மோடி, லடாக்கில் 4 ஆயிரம் சதுர மீட்டர் நம் இடம் பறி போய் உள்ளது பற்றி ஏன் பேசுவதில்லை?. கச்சத்தீவு விவகாரத்தில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது எதையும் செய்யாமல், தற்போது தேர்தல் நேரத்தில் கையில் எடுத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. கச்சத்தீவு விவகாரத்தில் ஆர்.டி.ஐ பைல் செய்த எத்தனையோ பேருக்கு தகவல் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், அண்ணாமலைக்கு மட்டும் கச்சத்தீவு விவகாரத்தில் ஆர்.டி.ஐ. தகவல் எப்படி கிடைத்தது?. இது முற்றிலும் விதிமீறிய செயல். கச்சத்தீவு விவகாரத்தை வைத்து பாஜக தமிழகத்தில் அரசியல் ஆதாயம் தேடுகிறது. ஓட்டு வங்கிக்காக சமயம் பார்த்து பாஜக மற்றும் மோடி கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர்” என்றார்.

Read More : Udhayanidhi Stalin | அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை..!!

Advertisement
Next Article