பாலிவுட் நடிகர் மாரடைப்பால் காலமானார்!. திரைபிரபலங்கள் இரங்கல்!
Vikas Sethi: கபி குஷி கபி கம் என்பது எல்லா காலத்திலும் மிகவும் பிரபலமான பாலிவுட் திரைப்படங்களில் ஒன்றாகும், 2001 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தி மொழி குடும்ப நாடகத் திரைப்படமாகும், இது கரண் ஜோஹரால் எழுதி இயக்கப்பட்டது மற்றும் யாஷ் ஜோஹரால் தயாரிக்கப்பட்டது. அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், ஷாருக்கான், கஜோல், ஹிருத்திக் ரோஷன், கரீனா கபூர் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் ராணி முகர்ஜி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
ஒரு இந்தியக் குடும்பம் தங்களின் வளர்ப்பு மகன் தாழ்த்தப்பட்ட சமூகப் பொருளாதாரப் பிரிவைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் சிரமங்களையும் தவறான எண்ணங்களையும் படத்தில் சித்தரித்து காட்சியளிக்கப்பட்டது. உலகளாவிய அளவில் மொத்தம் 1.36 பில்லியன் டாலர் ( 29 மில்லியன் டாலர் ) வசூலைப் பெற்றது.[4] இந்தியாவுக்கு வெளியே அதிக வசூல்பெற்ற இந்திய திரைப்படமாக திகழ்ந்தது.
இப்படம் வெளியாகி 22 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இந்தநிலையில், இப்படத்தில் நடித்த நடிகர் விகாஸ் சேத்தி மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 48. இவரது எதிர்பாராத மரணம் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்ததற்காக விகாஸ் சேதி பிரபலமாகினார்.
இறப்பு குறித்து மனைவி ஜான்வி சேத்தி கூறுகையில், குடும்ப நிகழ்ச்சிக்காக நாசிக்கில் இருந்தபோது அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். "என் அம்மாவின் வீட்டை அடைந்த பிறகு, அவர் வாந்தி மற்றும் தளர்வான அசைவுகளை அனுபவித்தார். இதையடுத்து "மறுநாள் காலை 6 மணியளவில் எழுப்ப முயற்சித்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறியுள்ளார். இதையடுத்து, உறக்கத்தில் மாரடைப்பு ஏற்பட்டு விகாஸ் உயிரிழந்ததாக மருத்துவர்கள் பின்னர் உறுதி செய்தனர். அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக மும்பை கூப்பர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Readmore: தள்ளிப்போகும் திருமணம்!. என்ன நடந்தது?. அதிர்ச்சி அளித்த நடிகை தமன்னா!