#Just In | அனைத்து ரேஷன் கடைகளையும் உடனே திறங்க..!! 5 கிலோ அரிசி, துவரம் பருப்பு..!! முக்கிய உத்தரவு..!!
கடந்த 17, 18ஆம் தேதிகளில் தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், 4 மாவட்டங்களும் வெள்ளக்காடாக காட்சியளித்தன. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு மற்றும் தன்னார்வலர்கள் நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கனமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளையும் திறக்க வேண்டுமெனவும், குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பரும்பு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ரேஷன் கடைகளுக்கு முன் தண்ணீர் தேங்கி இருந்தால், உடனே அகற்றவும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களிலும் ரேஷன் கடைகளை திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.