வெறும் ரூ.10 தான்!… ரயில் பயணிகளே இப்படியொரு திட்டம் இருப்பது தெரியுமா?
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தங்களுடைய நீண்ட தூரப் பயணங்களுக்கு ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். அதற்குக் காரணம், ரயில்களில் டிக்கெட் செலவு குறைவு. அதேபோல, வேகமாகவும் சௌகரியமாகவும் பயணம் செய்யலாம். குறிப்பாக, பெண்கள் மற்றும் முதியோருக்கு ரயில் பயணம் சிறப்பான ஒன்றாக உள்ளது.
ரயில் பயணம் செய்பவர்கள் சில நாட்களுக்கு முன்னரே டிக்கெட் புக்கிங் செய்துவிட வேண்டும். ஏனெனில், பேருந்துகளைப் போல ரயில்களில் எளிதில் டிக்கெட் கிடைத்துவிடாது. பெரும்பாலான மக்கள் ஆன்லைன் மூலமாக டிக்கெட் புக்கிங் செய்கின்றனர். அப்படி சீட் கிடைக்காது என்ற பட்சத்தில் சற்று அதிகம் செலவு செய்தாவது தட்கல் டிக்கெட் புக்கிங் செய்து பயணிப்பார்கள். ரயில் பயணம் செய்யும் நிறையப் பேர் இந்தப் பிரச்சினையை சந்தித்திருப்பார்கள். பல நேரங்களில் ரயில் சரியான நேரத்துக்கு வருவதில்லை. அதேபோல, பராமரிப்பு போன்ற காரணங்களால் ரயிகள் மாற்றிவிடப்படுவதும், ரத்து செய்யப்படுவதும் வழக்கம். அந்த சூழ்நிலையில், ரயில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். அதேபோல, வெவ்வேறு ரயில்களில் மாறிச் செல்பவகர்களும் ரயில் நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும்.
ஒருவேளை நீங்களும் இதுபோன்ற பிரச்சினையை சந்தித்து அருகில் எங்காவது ரூம் புக்கிங் செய்ய நினைத்தால் இனி அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. நீங்கள் மிகக் குறைந்த தொகையில் அறையை முன்பதிவு செய்யலாம். அதற்கு நீங்கள் எங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. IRCTC மூலம் ஆன்லைனில் அறைகளை முன்பதிவு செய்யலாம். இந்தியாவின் முக்கிய ரயில் நிலையங்களில் தங்குவதற்கு IRCTC மூலம் ஓய்வு அறைகள் வழங்கப்படுகின்றன. IRCTC ஓய்வு அறைகளை 24 மணி நேரம் முதல் 48 மணிநேரம் வரை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.
24 மணி நேரமும் தங்கும் படுக்கைக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை ஓய்வெடுக்கும் அறைக்கு ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படும். தங்கும் விடுதி படுக்கைக்கு 24 மணி நேரத்துக்கு ரூ.20 வசூலிக்கப்படுகிறது. 48 மணி நேரத்திற்கும் மேலான அறைக்கு 40 ரூபாய் செலவாகும். ஓய்வு பெறும் அறையை முன்பதிவு செய்ய IRCTC இணையதளத்தைப் பார்வையிட வேண்டும்.
அங்கே நீங்கள் மெனு ஐகானில் ஓய்வு பெறும் அறைகள் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் IRCTC கணக்கில் உள்நுழைய வேண்டும். அதில் உங்கள் PNR எண்ணை உள்ளிட்டு Search என்பதை கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு நீங்கள் தங்க விரும்பும் நிலையத்தைத் தேர்ந்தெடுக்கவும். செக்-இன் அல்லது செக்-அவுட் தேதி, படுக்கையின் வகை மற்றும் அறையின் வகை - ஏசி மற்றும் ஏசி அல்லாதது போன்ற விவரங்களைச் சேர்க்கலாம். கடைசியில் கட்டணம் செலுத்தி ரூம் புக்கிங் செய்யலாம்.