முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சூப்பர் திட்டம்...! வெறும் ரூ.520 செலுத்தினால் போதும்... ரூ.10 லட்சம் வரை விபத்து காப்பீடு பெறலாம்...!

Just pay Rs.520... you can get accident insurance up to Rs.10 lakhs
06:25 AM Jul 18, 2024 IST | Vignesh
Advertisement

அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555 அல்லது ரூ.755 பீரீமியத்தில், ரூ.10 லட்சம்/ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. சாமானிய மக்களுக்கும் விபத்துக் காப்பீட்டு திட்டங்களின் பலன்கள் சென்றடையும் வகையில், நாட்டின் மூலை முடுக்கெல்லாம் உள்ள அஞ்சலகங்கள் (தபால்காரர்/கிராம அஞ்சல் ஊழியர்கள்) மூலம், மிகக் குறைந்த பிரீமியத் தொகையுடன் கூடிய இந்த விபத்துக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

Advertisement

18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். விண்ணப்பப் படிவம், அடையாள/முகவரி சான்றின் நகல்கள் போன்ற எந்த விதமான காகிதப் பயன்பாடுமின்றி, தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தைப் பயன்படுத்தி, வெறும் 5 நிமிடங்களில் முற்றிலும் டிஜிட்டல் முறையில் இந்தப் பாலிசி வழங்கப்படும்.

திட்டத்தின் சிறப்பம்சங்கள்:

ரூ.10 லட்சம் அல்லது 15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீடு (விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு/நிரந்தர முழு ஊனம்/நிரந்தர பகுதி ஊனம்)ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்யும் வசதி, தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ளும் வசதி, விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகள் (உள்நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.1,00,000 வரை)விபத்தினால் மரணம்/ நிரந்தர முழு ஊனம்/நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) கல்வி செலவுகளுக்கு ரூ.1,00,000/- வரை விபத்தினால் மரணம்/ நிரந்தர முழு ஊனம்/நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) திருமண செலவுகளுக்கு ரூ.1,00,000/- வரை விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு, தினப்படி தொகை ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ.1000/- வீதம் 15 நாட்களுக்கு ( 2 நாட்கள் கழிக்கப்படும்) விபத்தினால் உயிரிழக்க நேரிட்டால், ஈமக்கிரியைகள் செய்ய ரூ.5000 வரை பெறலாம்.

ஆண்டிற்கு வெறும் ரூ.555-ல் அல்லது ரூ.755-ல் மேற்கண்ட பல்வேறு பலன்களை வழங்கும் இந்த விபத்துக் காப்பீட்டுப் பாலிசியை ஒருவர் எடுப்பதன் மூலம் எதிர்பாராமல் நிகழும் விபத்துகளால் ஏற்படும் உடல் நல நெருக்கடிகளையும், நிதி நெருக்கடிகளையும், உயிரிழப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விடுபட்டு குடும்பத்தின் எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும் என்பதால், பொது மக்கள் அனைவரும் அருகில் உள்ள அஞ்சலகங்கள் அல்லது தபால்காரர்கள் மூலம் இந்த விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.

Tags :
central govtInsurancepost office scheme
Advertisement
Next Article