ஒரே நாள் தான்..!! மொத்தமும் போச்சு..!! ரூ.6 லட்சம் கோடியாம்..!! கடும் சரிவை சந்தித்த பங்குச்சந்தை..!!
இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக பங்குச்சந்தை சுமார் 1000 புள்ளிகள் வரை சரிந்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் - ஈரான் நாடுகள் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், உலக நாடுகளில் பங்குச்சந்தை மிகப்பெரிய அளவில் சரிந்திருக்கிறது. நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்திய பங்குச்சந்தைக்கு விடுமுறை என்பதால், சரிவில் இருந்து தப்பிய நிலையில், இன்று வர்த்தகம் தொடங்கியதுமே சரிவைக் கண்டுள்ளது.
இந்திய பங்குச்சந்தையின் மதிப்பு ஒரே நாளில் ரூ.6 லட்சம் கோடி சரிந்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 300 புள்ளிகள் சரிந்து 25,490 புள்ளிகளுடனும், மும்பை பங்குச்சந்தை செக்செக்ஸ் 990 புள்ளிகள் சரிந்து 83,275 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் ஸ்டேட் வங்கி, சன் பார்மா, டாடா ஸ்டீல், அல்ட்ரா சிமெண்ட் போன்ற சில பங்குகள் மட்டும் உயர்ந்துள்ளன. கிட்டத்தட்ட அனைத்து பங்குகளும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பங்குச்சந்தைகளில் மிகப்பெரிய சரிவை சந்திக்க இஸ்ரேல் - ஈரான் போர் தான் காரணம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளது.
Read More : புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை..!! மீண்டும் குறையுமா..? முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்குமா..?