For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'இந்த பங்குகளில் கவனம் செலுத்தினால் போதும்..!' காலாண்டு முடிவுகளை வெளியிட்ட நிறுவனங்கள்!

03:52 PM May 16, 2024 IST | Mari Thangam
 இந்த பங்குகளில் கவனம் செலுத்தினால் போதும்     காலாண்டு முடிவுகளை வெளியிட்ட நிறுவனங்கள்
Advertisement

இந்திய பங்குச்சந்தைகளுக்கு சாதகமான உலகளாவிய உணர்வுகள் இருந்தபோதிலும், புதன் கிழமை வர்த்தகம் நிலையற்றதாக இருந்தது. இன்றைய வர்த்தகத்தில், எம் & எம், வோடபோன் ஐடியா, பையோகான், மேன்கைண்ட் பார்மா ஆகிய நிறுவனங்கள் தங்களின் காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளன.

Advertisement

மேன்கைண்ட் பார்மா ;

2023-24ம் நிதியாண்டின் மார்ச் காலாண்டு முடிவுகளை மேன்கைண்ட் பார்மா நிறுவனம் ரூ.477 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. அதாவது நிறுவனத்தின் நிகர லாபம் ஆண்டு அடிப்படையில் 62% அதிகரித்துள்ளது.

ஏசியன் பெயிண்ட் ;

ஜிடிபி மற்றும் பெயிண்ட் இண்டஸ்ட்ரியின் தொடர்பு குறித்த தலைமை நிர்வாக அதிகாரியின் கருத்துகள் குறித்து ஏசியன் பெயிண்ட்ஸ் தெளிவுபடுத்தியுள்ளது.

சிஎம்எஸ் இன்ஃபோ சிஸ்டம்ஸ் ;

சிஎம்எஸ் இன்ஃபோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் ஜனவரி-மார்ச் காலாண்டில் காலாண்டில் ரூ.91 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. நிறுவனம் செயல்பாடுகளின் மூலம் ஈட்டிய வருவாய் ரூ.627 கோடியாக உள்ளது

எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் ;

எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் மார்ச் காலாண்டில் ரூ.1091 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. அதே காலகட்டத்தில் என்ஐஐ ரூ.2,238 கோடியாக இருந்தது.

ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் ;

ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் பங்குபெறும் திட்டங்களில் இதுவரை இல்லாத அதிகபட்ச போனஸ் ரூ.3,722 கோடியை அறிவித்தது. இந்த போனஸ் மூலம் 22.23 லட்சம் பாலிசிதாரர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொத்தமல்லி-யை யாராவது காசு போட்டு வாங்குவாங்களா? – Blinkit CEO எடுத்த முடிவு!

Advertisement