முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கிட்னியில் உள்ள கல்லை உடனே வெளியேற்ற இதை மட்டும் குடிங்க..!! நீங்களே வீட்டில் தயாரிக்கலாம்..!!

05:56 PM Jan 20, 2024 IST | 1newsnationuser6
Advertisement

நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிக அவசியம். முக்கிய உறுப்புகளில் ஒன்றான சிறுநீரகத்தில் கல் உருவாகாமலும், தொற்றுகள் ஏற்படாமலும் இருக்க நாம் சில ஆரோக்கிய வழிகளை பின்பற்ற வேண்டும். சிறுநீரகத்தில் கல் உருவாக உடலுக்கு தேவையான தண்ணீர் இல்லாமை, நாள்பட்ட வயிற்றுப் போக்கு, உயர் ரத்த சர்க்கரை, சிறுநீரக தொற்று ஆகியவை பொதுவான காரணங்களாக சொல்லப்படுகிறது.

Advertisement

சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்பட்டாலோ, இளஞ்சிவப்பு, சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் சிறுநீர் வெளியேறினாலோ அவை கிட்னியில் ஸ்டோன் ஏற்பட்டுள்ளதை நமக்கு காட்டும் அறிகுறி ஆகும். எனவே, வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்து கிட்னியில் உள்ள கல்லை எப்படி நீக்குவது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

செய்முறை

* முதலில் பாதி முள்ளங்கியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அடுத்து சிறிதளவு வாழைத்தண்டையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

* இதை இரண்டையும் மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து அதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சிட்டிகை அளவு உப்பு சேர்த்து கலந்து பருகவும்.

* இதை காலை உணவிற்கு முன்பு குடிப்பது நல்லது. இவ்வாறு செய்வதன் மூலம் கிட்னியில் உள்ள கற்கள் அனைத்தும் கரைந்து சிறுநீர் வழியாக வெளியேறி விடும்.

Tags :
உடல் ஆரோக்கியம்உப்புஎலுமிச்சைகிட்னி கல்முள்ளங்கிவாழைத்தண்டு
Advertisement
Next Article