முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சார்ஜ் போடும்போது இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க..!! இதனாலதான் ஃபோன் சார்ஜ் சீக்கிரம் குறையுது..!!

Your smartphone's battery level needs to be charged after it drops to 20%.
02:52 PM Oct 17, 2024 IST | Chella
Advertisement

ஸ்மார்ட்போன் குறைந்தபட்சம் 300 முறைக்கு மேல், அதிகபட்சம் 500 முறை வரை சார்ஜ் செய்யப்படும்போது, ஸ்மார்ட்போனிற்குள் இருக்கும் லித்தியம் அயன் (Lithium Ion) பேட்டரி அதன் அதிகபட்ச சார்ஜ் மற்றும் டிஸ்சார்ஜ் சுழற்சியை எட்டி இருக்கும். மேற்குறிப்பிட்ட சார்ஜ் / டிஸ்சார்ஜ் சுழற்சிகளை கடந்த பிறகு ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும் போது உள்ளிருக்கும் லித்தியம் ஐயன் பேட்டரி மெல்ல மெல்ல பலவீனமாக தொடங்கும். இதனால், பேட்டரியின் திறன் மெல்ல மெல்ல குறையத் தொடங்கும்.

Advertisement

ஒரு கட்டத்தில் ஸ்மார்ட்போனின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தாலும் கூட அது நீண்ட நேரம் நீடிக்காமல் அடிக்கடி குறைந்துவிடும். இந்த சிக்கலை தவிர்க்க விரும்பினால், 300 அல்லது 500-வது சார்ஜ் / டிஸ்சார்ஜ் சுழற்சிக்கு பின்னர், உங்கள் மொபைலை சார்ஜ் போடும் போது கீழ் வரும் 4 தவறுகளில் ஒன்றைக்கூட செய்ய வேண்டாம்.

* உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி லெவல் ஆனது 20% வரை குறைவான பிறகே சார்ஜ் செய்ய வேண்டும். 30 அல்லது 40 சதவீதம் எல்லாம் லோ பேட்டரி என நினைத்துக் கொள்ள வேண்டாம்.

* அதேபோல 2 அல்லது 3 சதவீதம் வரை வரட்டும் என்று காத்திருந்து, அதன் பின்னர் சார்ஜ் செய்வதும் தவறு தான்.

* அது போன்ற மற்றொரு முக்கியமான விஷயம், சார்ஜ் போடும் போது ஸ்மார்ட்போனின் பேட்டரி லெவல் 100% ஐ எட்டட்டும். அப்போது தான் அது முழுமையாக சார்ஜ் ஆனதாக கணக்கு என்றும் காத்திருக்க வேண்டாம். 90 சதவீதத்திற்கு மேல் சென்றதுமே சார்ஜ் செய்வதை நிறுத்திக் கொள்ளவும்.

* 300 - 500 சார்ஜ் / டிஸ்சார்ஜ் சுழற்சிகளுக்கு பின்னர், மேற்குறிப்பிட்ட பழக்கத்தை தொடர்ந்து பின்பற்றினால் உங்கள் போனின் பேட்டரி லைஃப் பெரிய அளவில் பாதிக்கப்படாது.

தற்போது வரை செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்களுடன் அதற்கு ஏற்ற சார்ஜர்களை அனுப்புகிறது. ஆனால், இந்த வழக்கம் கூடிய விரைவில் மாற உள்ளது. அதாவது, இனிமேல் ஸ்மார்ட்போன்களுடன் சார்ஜர்களை அனுப்புவதை நிறுத்திவிட்டு சார்ஜர்களை தனித்தனியாக விற்பனை செய்ய உள்ளனர். அப்போது தரமான அங்கீகரிக்கப்பட்ட சார்ஜர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அப்போது மட்டுமல்ல… எப்போதும் தான். பணத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்று போலியான சார்ஜர்களை பயன்படுத்த வேண்டாம்.

மேலும் போன்களை இரவு முழுவதும் சார்ஜ் செய்வதும் நல்லதல்ல. சமீப காலமாக வெளியாகும் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள் 100 சதவீதம் பேட்டரி லெவலை எட்டியதும் தனக்குள் இருக்கும் பேட்டரியை சார்ஜ் செய்வதை நிறுத்தி விடுகின்றன. ஆனால் ஸ்மார்ட்போனுடன் கனெக்ட் செய்யப்பட்டு இருக்கும் சார்ஜர் வேலை செய்து கொண்டே தான் இருக்கும். அது உங்கள் பேட்டரியை பாதிக்காமல் போகலாம். ஆனால் ஸ்மார்ட்போனை பாதிக்கலாம். எனவே ஒரு இரவு முழுவதும், ஸ்மார்ட்போனிற்கு சார்ஜ் செய்யும் பழக்கம் இருந்தால் அதை உடனே நிறுத்திக்கொள்ளுங்கள்.

மற்றொரு முக்கியமான விஷயம்... ஸ்மார்ட்போனில் உள்ள பேட்டரியின் லைஃப்டைம் மற்றும் அதன் சகிப்புத்தன்மைக்கு அந்த ஸ்மார்ட்போனை சுற்றியுள்ள வெப்பநிலை மிக முக்கியமான பங்களிப்பை வழங்குகிறது. அதிக வெப்பநிலையின் கீழ் வைக்கப்படும் போது ஸ்மார்ட்போனிற்குள் இருக்கும் ​​பேட்டரி அதிக அழுத்தத்தின் கீழ் வைக்கப்படுகிறது என்று அர்த்தம். அதோடு, குறைந்த வெப்பநிலையில் இருப்பதை விட மிகவும் வேகமான முறையில் அதன் திறனையும் இழக்கிறது. எனவே, உங்கள் ஸ்மார்ட்போனை வெயில் படும்படி வைப்பது, அடுப்பின் அருகே வைப்பது அதிக நேரம் கார் டிக்கி அல்லது ஸ்கூட்டர் டிக்கியில் வைப்பது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். இப்படி செய்தால் உங்கள் ஸ்மார்ட் போன் கொஞ்சம் கூடுதல் காலம் உபயோகப்படும்.

Read More : இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் மற்றும் இறப்புகள் கடுமையாக அதிகரிக்கும்..!! ICMR எச்சரிக்கை..!!

Tags :
ஃபோன் சார்ஜ்பேட்டரிபேட்டரி திறன்லித்தியம்ஸ்மார்ட்போன்
Advertisement
Next Article