இந்த உணவை மட்டும் அதிகமா சாப்பிடாதீங்க..!! அதுவும் காலை உணவாக எடுத்துக் கொண்டால் அவ்வளவு தான்..!!
சுவையாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற ஏக்கம் அனைவருக்கும் இருக்கும். ஆனால், அதை அளவாக உட்கொண்டால் எந்த பிரச்சனையும் இல்லை. இது, முட்டை போன்ற ஆரோக்கிய உணவுகளுக்கும் பொருந்தும். நிச்சயமாக, முட்டை மிகவும் ஆரோக்கியமானவை மற்றும் சத்தானவை தான். ஆனால், தினசரி உட்கொள்ளும் போது அதனை அளவோடு தான் சாப்பிட வேண்டும்.
விளையாட்டு வீரர்கள் அல்லது ஜிம்மில் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு முட்டைகள் கட்டாயம் தேவைப்படுகிறது. உணவியல் நிபுணர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தினமும் இரண்டு முட்டைகளுக்கு மேல் சாப்பிட பரிந்துரைக்கலாம். ஏனென்றால், அவர்கள் மிகவும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை வழிநடத்துகிறார்கள். ஆனால், இந்த வகை மக்களுக்கும் கூட, புரோட்டீனுக்காக முட்டையின் வெள்ளைக்கருவை மட்டுமே சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு அதிகம் உள்ளதால் முட்டையின் மஞ்சள் கருவை தவிர்க்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
தற்போது சாதாரண மக்கள் அன்றாட வேலையைச் செய்யவும், சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க விரும்புகிறார்கள். அவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகளை உட்கொள்ளலாம். இதுவும் வளர்சிதை மாற்றம், எடை, உடல் வகை மற்றும் வயது போன்ற காரணிகளைப் பொறுத்தது. அதிகப்படியான முட்டைகள் அதிக கொழுப்பு மற்றும் உடல் நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
அதிகப்படியான முட்டைகள் அதிக கொலஸ்ட்ராலை ஏற்படுத்தும். முட்டையில் அதிக கொழுப்பு உள்ளது. அதனை ஒரே நாளில் அதிக அளவு உட்கொண்டால், உடல்நலப் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஜர்னல் நியூட்ரியன்ட் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், முட்டைகளை உட்கொள்ளாதவர்களை விட காலை உணவாக முட்டைகளை உட்கொள்பவர்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் உருவாகும் அபாயம் அதிகம் என்று தெரியவந்துள்ளது. இருப்பினும், முழு முட்டையையும் சாப்பிடுவதற்கு பதிலாக, மஞ்சள் கருவினை தவிர்த்து விட்டு முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிடலாம். முட்டையின் வெள்ளைக்கருவில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அதில், கொலஸ்ட்ரால் இல்லை.
மேலும், அதிகளவிலான முட்டைகள் சாப்பிடுவதால், இதய நோய்கள் உருவாகும் அபாயம் உள்ளது. முட்டை கொலஸ்ட்ராலை அதிகரிக்குமா என்ற கேள்வி இன்னும் நிறைய விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது. பல நிபுணர்கள் முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கும் கொலஸ்ட்ரால் நேரடியாக கொலஸ்ட்ராலை அதிகரிக்க செய்வதாக நம்புகின்றனர். எனவே, மருத்துவரின் ஆலோசனையின் பேரில் முட்டை சாப்பிடுவது நல்லது.
குறிப்பாக முட்டையின் மஞ்சள் கருவில் நிறைய கலோரிகள் மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளது. இதை அதிகமாக உட்கொள்வது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். எடை குறைந்த மற்றும் ஒல்லியாக இருப்பவர்களுக்கு இந்த எடை அதிகரிப்புக்கு நல்லது. நீங்கள் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், முட்டையின் மஞ்சள் பகுதியை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
Read More : முழங்கால் வலியால் அவதிப்படுகிறீர்களா..? உங்கள் வீட்டில் இருக்கும் இந்த 3 பொருளே போதும்..!!