முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வேகமெடுக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிப்பணி!! ஜூன் 18 தொகுதி நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை..

It has been reported that a consultation will be held regarding the appointment of constituency administrators in preparation for the 2026 Legislative Assembly elections.
10:53 AM Jun 08, 2024 IST | Mari Thangam
Advertisement

2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் வகையில் தொகுதி நிர்வாகிகள் நியமனம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அவரின் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அத்துடன், சென்னை பனையூரில் கட்சி நிர்வாகிகளை சந்தித்த விஜய், மக்கள் பணியை துரிதப்படுத்த அறிவுறுத்தினார். அத்துடன் அடிக்கடி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை வழங்கி வருகிறார்.

இந்நிலையில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் வகையில் தொகுதி நிர்வாகிகள் நியமனம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் பிறந்த நாள் அன்று செய்யக்கூடிய நலத்திட்ட உதவிகள் குறித்தும், பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது பற்றியும், ஆலோசனை நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில், புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இந்த ஆலோசனை நடைபெற உள்ளது. தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விஜய் கலந்து கொள்ளவில்லை. புஸ்ஸி ஆன்ந்த் தலைமையில், மாவட்ட, மாநில மற்றும் தொகுதி நிர்வாகிகள் என 300க்கும் மேற்பட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் விஜய் கலந்துகொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more ; 2025க்குள் இந்தியாவில் காசநோயை ஒழிப்பது சாத்தியமில்லை!! காரணம் என்ன?

Tags :
actor vijayChennaielection commissionThalapathytvkvijayVijay Party Registration
Advertisement
Next Article