For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இந்த 4 வகையான ஜுஸ் போதும்.!?

06:57 PM Feb 24, 2024 IST | 1newsnationuser5
நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இந்த 4 வகையான ஜுஸ் போதும்
Advertisement

பொதுவாக தற்போதுள்ள காலகட்டத்தில் பலரும் ஊட்டச்சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வதில்லை. இதற்கு மாற்றாக பதப்படுத்தபட்ட உணவுகளையும், துரித உணவுகளையும் சுவைக்காக மட்டுமே உண்டு வாழ்கின்றனர். இது உடலில் பல நச்சுக்களை தேங்க வைத்து நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. மேலும் இதனால் உடலில் பல நோய்களும் ஏற்படுகின்றது.

Advertisement

எனவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி பல வகையான நோய்கள் பாதிக்காமல் இருப்பதற்கு இந்த 4 வகையான பழச்சாறுகளை அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இது உடலுக்கு மிகவும் நன்மையை ஏற்படுத்தும். அவை என்னென்ன பழச்சாறுகள் என்பது குறித்து பார்க்கலாம்?

1. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க - முழு ஆப்பிள் - 1, சிறிய இஞ்சி துண்டுகள் , எழுமிச்சை பழ சாறு -1 டீஸ்பூன், மஞ்சள் துண்டுகள் - 1, புதினா, நெல்லிக்காய் - 1 இவை அனைத்தையும் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து எடுத்து வடிகட்டி இறுதியாக பிங்க் சால்ட் சேர்த்து வாரத்திற்கு ஒரு முறை குடிக்க வேண்டும். வைட்டமின் சி, தாதுக்கள் நிறைந்த இந்த ஜூஸை குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
2. சருமம் பளபளக்க, தோல் நோய்கள் நீங்க -  கேரட், தக்காளி, வெள்ளரிக்காய் - 1, எழுமிச்சை சாறு - 1 டீஸ்பூன், இஞ்சி சிறிய துண்டு இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து வாரத்திற்கு இரண்டு முறை ஜூஸாக குடித்து வந்தால் உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தி தோலை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக் கொள்கிறது. மேலும் தோல் நோய்கள், புண்கள், வறட்சி போன்றவற்றையும் சரி செய்கிறது.
3. ரத்த சோகையை நீக்க - பாதி கேரட் துண்டுகள், வெள்ளரிக்காய், நெல்லிக்காய், ஆரஞ்சு பழம் போன்றவற்றை நன்றாக அரைத்து ஜூஸாக வாரத்திற்கு இரண்டு முறை குடித்து வந்தால் உடலில் ஹீமோகுளோபின் மற்றும் இரும்பு சத்து அதிகரித்து ரத்தசோகையை போக்குகிறது. மேலும் முடி உதிர்தல் குறைந்து அதிகமாக முடி வளர செய்கிறது.
4. அஜீரணம், மலச்சிக்கல் சரியாக -  வெள்ளரிக்காய், இஞ்சி, புதினா, நெல்லிக்காய், எலுமிச்சை பழச்சாறு, மிளகு தூள் மூன்றையும் நன்றாக அரைத்து ஜூஸாக குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமடைந்து நெஞ்செரிச்சல், அஜீரணம், மலச்சிக்கல் போன்ற நோய்களை குணப்படுத்துகிறது. மேலே குறிப்பிட்ட நான்கு வகையான ஜூஸ்களையும் வாரத்திற்கு இரண்டு முறை குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமடைந்து நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழலாம்.

English summary : these four types of juices for healthy lifestyle

Read more : வருடத்திற்கு 10 நாட்கள் மட்டுமே திறக்கப்படும் மர்ம கோயில்.! எங்கு உள்ளது.!?

Advertisement