முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

திமுக, அதிமுகவை கதிகலங்க வைக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் பழைய கேஸ் கட்டுகள்..!! இன்று முதல் விசாரணை..!!

07:55 AM Jan 02, 2024 IST | 1newsnationuser6
Advertisement

சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று முதல் விசாரணை நடத்துகிறார்.

Advertisement

தமிழ்நாடு அமைச்சராக இருந்த பொன்முடி மீதான இரு சொத்துக் குவிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2006 - 2011 ஆம் ஆண்டு காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதேபோல், 1996 - 2001ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பொன்முடி இருந்தார். அப்போது அவர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம் பொன்முடி உள்ளிட்டோரை விடுதலைச் செய்தது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். 2006ஆம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் 2012ஆம் ஆண்டு சிவகங்கை நீதிமன்றத்தால் ஓபிஎஸ் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கை மீண்டும் தாமாக முன் வந்து விசாரிப்பதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தார்.

அதேபோல் 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் அமைச்சர்களாக இருந்தனர். இவர்கள் இருவரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2021 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் வகையில், கடந்த ஆகஸ்ட் மாதம் இவர்கள் மீதான வழக்கை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

2006 முதல் 2011 ஆம் ஆண்டு தமிழக வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்தார் ஐ.பெரியசாமி. இவர் 2008ஆம் ஆண்டு கருணாநிதியின் பாதுகாவலர் கணேசனுக்கு வீட்டு வசதி வாரிய வீட்டை முறைகேடாக அமைச்சர் பெரியசாமி ஒதுக்கினார். 2012 ஆம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை இந்த வழக்கை தொடர்ந்தது. இதில் இருந்து கடந்த ஆண்டு மார்ச் மாதமே பெரியசாமி விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கை கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி முதல் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

2001ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் பா.வளர்மதி. இவர் மீது வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 2012ஆம் ஆண்டு வளர்மதி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கையும் மறு ஆய்வு செய்ய நீதிபதி ஆனந்த், தாமாக முன் வந்து எடுத்துள்ளார்.

Tags :
அமைச்சர் ஆனந்த் வெங்கடேஷ்அமைச்சர்கள்சென்னை உயர்நீதிமன்றம்திமுகவிசாரணை
Advertisement
Next Article