ரிலேஷன்ஷிப்பில் ஜோவிகா..!! பிக்பாஸ் வீட்டில் உண்மையை உடைத்த விசித்ரா..!!
பிக்பாஸ் சீசன் 7இல் தாய்-மகள் போல இருக்கும் விசித்ரா - ஜோவிகா இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில் தினேஷிடம் பேசும் விசித்ரா, ஜோவிவோட படிப்பு பத்தி எதார்த்தமா தான் நான் சொன்னேன். அதை பெரிய பிரச்சனையாக்கி வேற மாதிரி கிரியேட் ஆகிட்டா. நான் கேம்னு நினைச்சு ஆடல. இவங்களா வலையில வந்து விழுறாங்க. இதற்கு பதிலளித்த தினேஷ், அவங்க கேம் ஆடிட்டு நான் விளையாடக் கூடாதுனு நினைக்குறாங்கல்ல, ஒருவேளை அது அவங்களோட கேம் ஆகக் கூட இருக்கலாம் என சொல்கிறார்.
இதையடுத்து பேசிய விசித்ரா, என்னைப் பொறுத்தவரை அவ Poisonous ரிலேஷன்ஷிப்ல இருக்கா. அவகூட இருக்குற எல்லாமே விஷங்க. அதனால் அவளும் அந்த மாதிரி தான் யோசிப்பா என மாயா, பூர்ணிமா ஆகியோரையும் சாடி இருக்கிறார் விசித்ரா. தற்போது ஜோவிகா பற்றி விசித்ரா பேசிய இந்த புரோமோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.