For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

T20 World Cup ; ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

05:26 PM Apr 30, 2024 IST | Mari Thangam
t20 world cup   ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிப்பு
Advertisement

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் மாதம் தொடங்கவுள்ள நிலையில் ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1ஆம் தேதி அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் தொடங்க இருக்கிறது. இந்த உலகக்கோப்பை தொடரில் குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் டி என்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. இதில் பங்கேற்கும் 20 அணிகளும் வரும் மே 1ஆம் தேதிக்குள் 15 பேர் கொண்ட அணியை அறிவிக்க வேண்டும் என்ற விதி உள்ளது.

நேற்று முதல் அணியாக நியூசிலாந்து தனது 15 வீரர்களைக் கொண்ட அணியை அறிவித்தது. இதில் கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஃபின் ஆலன், டிரென்ட் போல்ட், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிமி சவுத். ரிசர்வ் வீரர்: பென் சியர்ஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், உலகக் கோப்பையில் பங்கேற்கும் ஜோஸ் பட்லர் தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த பட்டியலில், ‘மொயீன் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜொனாதன் பேர்ஸ்டோவ், ஹாரி ப்ரூக், சாம் கரண், பென் டக்கெட், டாம் ஹார்ட்லி, வில் ஜாக்ஸ், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டோன், அடில் ரஷித், ஃபில் சால்ட், ரீஸ் டாப்லி, மார்க் வூட்’ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Advertisement