For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஜானி சின்ஸ் - ரன்வீர் சிங் காம்போவில் வெளியான வீடியோ ..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

03:16 PM Feb 13, 2024 IST | 1newsnationuser4
ஜானி சின்ஸ்   ரன்வீர் சிங் காம்போவில் வெளியான வீடியோ      அதிர்ச்சியில் ரசிகர்கள்
Advertisement

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரன்வீர் சிங், பிரபல ஆபாச பட நடிகர் ஜானி சின்ஸுடன் விளம்பரத்தில் நடித்திருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது. ஆண்களின் பாலியல் ஆரோக்கியம் பற்றிய 'bold care' என்ற நிறுவனத்தின் விளம்பரத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ளனர் .

Advertisement

சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர்கள், இது போன்ற விளம்பர படங்களில் நடிப்பதற்கு தயக்கம் காட்டுவார்கள். ஆனால் எதையும் வித்தியாசமாகவும், தைரியத்துடனும் செய்யும் ரன்வீர் சிங் இந்த 18 பிளஸ் விளம்பரத்திலும் துணிச்சலுடன் நடித்திருக்கிறார். இது தொடர்பான வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்திலும் பதிவு செய்து இருக்கிறார் ரன்வீர் சிங். இவரது இந்த விளம்பரம் தொடர்பாக இரு வேறு விமர்சனங்களை ரசிகர்கள் முன் வைத்துள்ளனர்.

சிலர் ஆண்களின் பாலியல் ஆரோக்கியம் தொடர்பாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த முயற்சியை பாராட்டி இருக்கின்றனர் . ஆனால் மற்றொரு தரப்பினர் பாலிவுட்டின் முன்னணி ஹீரோ இது போன்ற ஆபாச நடிகருடன் இணைந்து நடிக்கலாமா என்று தங்களது விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். ரன்வீர் சிங் பொறுத்தவரை சர்ச்சையான விஷயங்களை அடிக்கடி பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கூட ஒரு பத்திரிக்கைக்கு நிர்வாண போஸ் கொடுத்து அதனையும் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆண்களின் பாலியல் பிரச்சனைக்கு தீர்வு தரக்கூடிய போல்ட் கேர் என்ற மருந்தின் விளம்பரத்தில் ரன்வீர் சிங், ஜானி சின்ஸுடன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement