For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

16 முறை சாம்பியன்.. 90-ஸ் கிட்ஸ்களின் ஹீரோ ஜான் சீனா ஓய்வை அறிவித்தார்!! - ரசிகர்கள் ஷாக்!

John Cena has announced that he will retire from professional wrestling in 2025.
12:45 PM Jul 07, 2024 IST | Mari Thangam
16 முறை சாம்பியன்   90 ஸ் கிட்ஸ்களின் ஹீரோ ஜான் சீனா ஓய்வை அறிவித்தார்     ரசிகர்கள் ஷாக்
Advertisement

90-ஸ் கிட்ஸ்களால் இன்றுவரை மறக்க முடியாத ஒரு WWE மல்யுத்த வீரர் ஜான் சீனா. இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர் களத்திற்குள் எண்ட்ரி கொடுக்கும் ஸ்டைலே மிகவும் பிரபலம். இவர் 16 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மேலும், பல ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் WWE போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜான் சீனா அறிவித்துள்ளார்.

Advertisement

World wrestling entertainment எனப்படும் தொழில்முறை மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக, பிரபல வீரரான ஜான் சீனா அறிவித்துள்ளார். வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் wwe போட்டியில் இருந்து முற்றிலும் விலகிவிடுவேன் என தெரிவித்துள்ளார். டோராண்டோவில் நடந்த மனி இன் தி பேங்க் பிரீமியம் லைவ் நிகழ்வின் போது இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். அப்போது ஒரு புதுவிதமான டி-ஷர்ட்டை அணிந்திருந்த ஜான் சீனா, அதில் 'தி லாஸ்ட் டைம் இஸ் நவ்' என்று குறிப்பிட்டு இருந்தார்.

கடைசியாக ரெசில்மேனியா போட்டியில் ஜான் சீனா பங்கேற்பார் என கருதப்பட்டது. இருப்பினும், மனி இன் தி பேங்க் மீடியா நிகழ்ச்சியில் பேசிய ஜான் சினா, ரெஸில்மேனியா 41 ஷோ ஆஃப் ஷோ தனது இறுதித் தோற்றமாக இருக்கும் என்றும், டிசம்பர் 2025 வரை மல்யுத்தம் செய்ய இலக்கு வைத்திருப்பதாகவும்' தெரிவித்தார். இந்த அறிவிப்பால் அதிர்ச்சியடைந்த அவரது ரசிகர்கள், தயவு செய்து உங்கள் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் ஓய்வு பெற வேண்டாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags :
Advertisement