சத்துணவு திட்டத்தில் வேலை..!! 8,997 காலிப்பணியிடங்கள்..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..? வெளியான முக்கிய அறிவிப்பு..!!
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் நலனுக்காக, சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள், தினசரி மதிய உணவு உட்கொண்டு வருகின்றனர். மாணவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு, தினந்தோறும் விதவிதமான சத்துணவு வகைகள் தயாரித்து, பரிமாறப்பட்டு வருகிறது. இவற்றில் அவ்வப்போது சிறு மாற்றங்களும் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான், தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு பணியாளர்கள் காலியிடங்களை நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மொத்தம் உள்ள 8,997 சத்துணவு சமையல் உதவியாளர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவை அனைத்தும் மாதம் ரூ.3,000 என்ற தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்பப்பட இருக்கிறது. இந்தப் பணியில் நியமனம் செய்யப்படுபவர்கள் 12 மாதங்கள் வரை பணிபுரியலாம். இவர்களில் திருப்திகரமாக வேலை பார்ப்பவர்கள் தகுதியானவர்களாக கருதப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள். அவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியமாக மாதம் ரூ. 3,000 முதல் ரூ.9,000 வரை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : சென்னைக்கு மீண்டும் தீவிர மழை எச்சரிக்கை..!! டெல்டா மாவட்டங்களுக்கு ஆபத்து..!! வானிலை மையம் வார்னிங்..!!