For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மத்திய அரசு துறைகளில் வேலை..!! குரூப் - சி பணிகளுக்கான போட்டித் தேர்வு தேதி அறிவிப்பு..!!

07:14 AM Apr 13, 2024 IST | Chella
மத்திய அரசு துறைகளில் வேலை     குரூப்   சி பணிகளுக்கான போட்டித் தேர்வு தேதி அறிவிப்பு
Advertisement

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பிளஸ் 2 கல்வித் தகுதி கொண்ட குரூப்-சி பணிகளுக்கான போட்டித் தேர்வு ஜூன் மற்றும் ஜூலையில் நடத்தப்படும் என பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisement

எஸ்எஸ்சி எனப்படும் பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த மேல்நிலைக் கல்வி (பிளஸ் 2) நிலையிலான பணியாளர் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அலுவலகங்களில் எழுத்தர், இளநிலை செயலக உதவியாளர் உள்ளிட்ட குரூப்-சி பிரிவு பணிகளுக்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

பணியின் பெயர், வயது வரம்பு, கல்வித் தகுதி, தேர்வுக் கட்டணம், தேர்வு மையம், ஆன்லைன் விண்ணப்ப முறை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் www.ssc.gov.in என்ற இணையதளத்தில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன. ஆன்லைனில் விண்ணப்பிக்க மே 7ஆம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட தென்மண்டலத்தில் கணினி வழி தேர்வு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 21 மையங்களில் நடைபெறவுள்ளது என்று இந்த தகவலை பணியாளர் தேர்வாணையத்தின் தென்மண்டல இயக்குநர் கே.நாகராஜா தெரிவித்துள்ளார்.

Read More : BREAKING | ஏப்ரல் 19ஆம் தேதி நீதிமன்றங்களுக்கும் விடுமுறை..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Advertisement