Job Vacancy | ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொட்டிக்கிடக்கும் காலியிடங்கள்..!! நல்ல சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக காலியாக உள்ள சுகாதார பணியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள நர்ஸ் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தற்போதைய அறிவிப்பின்படி, திருவண்ணாமலை மாடவ்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஸ்டாப் நர்ஸ்/எம்எல்எச்பி என்ற பிரிவில் மொத்தம் 25 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் டிப்ளமோ ஜிஎன்எம், பிஎஸ்சி நர்சிங் முடித்திருக்க வேண்டும். விண்ணப்பம் செய்ய விரும்புவோர் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாத சம்பளமாக ரூ.18,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://tiruvannamalai.nic.in/ என்ற இணையதளத்திற்கு சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அருகே உள்ள விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்து பூர்த்தியிட்டு உரிய சான்றிதழ்களின் நகல்களை இணைத்து மார்ச் மாதம் 6ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை கவுரவ செயலாளர்/ தணை இயக்குநர் சுகாதார பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society), தணை சுகாதார பணிகள் அலுவலகம், பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை, திருவண்ணாமலை என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால் விண்ப்பத்தை நேரில் வழங்கலாம்.
விண்ணப்பம் செய்யும்போது பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு சான்று, இருப்பிட சான்று, சாதிச்சான்று, மாற்றுத்திறனாளி, கைம்பெண், கணவனால் கைவிடப்பட்ட பெண், 3ஆம் பாலினத்தவர் என்றால் அதற்கான சான்றுகளின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். மேலும், கொரோனா காலத்தில் பணியாற்றி அனுபவம், அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய அனுபவம் இருந்தால் அதன் சான்றிதழ்களையும், டிஎன்என்எம்சி பதிவு சான்றிதழையும் இணைக்க வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இது ஒரு தற்காலிக பணியாகும். எந்த காரணம் கொண்டும் பணி நிரந்தரம் செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.