For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பிரபல வங்கியில் வேலைவாய்ப்பு..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..? உடனே அப்ளை பண்ணுங்க..!!

1,500 professional vacancies are being filled in Indian Bank branches across the country. There are 277 seats in Tamil Nadu alone.
05:10 AM Jul 28, 2024 IST | Chella
பிரபல வங்கியில் வேலைவாய்ப்பு     மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா    உடனே அப்ளை பண்ணுங்க
Advertisement

நாடு முழுவதும் உள்ள இந்தியன் வங்கி கிளைகளில் 1,500 தொழில்பழகுநர் இடங்கள் நிரப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 277 இடங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியன் வங்கி தொழில்பழகுநர் இடங்களுக்கு 01.07.2024 தேதியின் படி, குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சமாக 28 வயது வரை இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கூடுதலாக 5 ஆண்டுகள் வரையும், ஒபிசி பிரிவினருக்கு கூடுதலாக 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 10 ஆண்டுகள் மற்றும் கணவரை இழந்த பெண்கள், கணவரைப் பிரிந்த பெண்களுக்கு கூடுதலாக வயது வரம்பில் 35 முதல் 40 வயது வரை தளர்வு உள்ளது.

Advertisement

மேலும், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வங்கி தொழில்பழகுநர் இடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மெட்ரோ/ நகர் பகுதி கிளைகளில் பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ.15,000 மாத உதவித்தொகையாக கொடுக்கப்படும்.
புறநகர் மற்றும் கிராமப் பகுதி கிளைகளில் பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ.12,000 மாத உதவித்தொகையாக கொடுக்கப்படும்.

இந்த காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். மேலும், உள்ளூர் மொழிக்கான தகுதி தேர்வு நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு தொழில்பழகுநர் வாய்ப்பு வழங்கப்படும். வங்கி தொழில்பழகுநர் இடங்களுக்கு www.nats.education.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதனைத்தொடர்ந்து, இந்தியன் வங்கியின் https://www.indianbank.in/ என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணமாக ரூ.500 ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க கடைசி நாளாக 31.07.2024 அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More : நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க சூப்பர் டிப்ஸ்..!! தினமும் இதை ஃபாலோ பண்ணுங்க..!!

Tags :
Advertisement