For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Job | சூப்பர் அறிவிப்பு..!! டிகிரி, டிப்ளமோ முடித்துள்ளீர்களா..? மாதம் ரூ.2 லட்சம் வரை சம்பளம்..!! கொட்டிக்கிடக்கும் வேலை..!!

08:04 AM Mar 05, 2024 IST | 1newsnationuser6
job   சூப்பர் அறிவிப்பு     டிகிரி  டிப்ளமோ முடித்துள்ளீர்களா    மாதம் ரூ 2 லட்சம் வரை சம்பளம்     கொட்டிக்கிடக்கும் வேலை
Advertisement

இந்தியாவில் முன்னணி கல்வி நிறுவனங்களாக ஐஐடி செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னையிலும் இயங்கி வருகிறது. இந்நிலையில் தான், சென்னை ஐஐடியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Advertisement

காலியிடங்கள் : சென்னை ஐஐடியில் சூப்பிரண்டிங் என்ஜினீயர் (குரூப் ஏ) பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஜூனியர் டெக்னீசியன் (குரூப் சி) பணிக்கு 40 பேரும், ஜூனியர் டெக்னீசியன் பணியை பொறுத்தமட்டில் பிரிவு வாியாக சிவில் - 3, கெமிஸ்ட்ரி - 3, கம்பயூட்டர் சயின்ஸ் - 1, மெக்கானிக்கல் - 11, இசிஇ - 2 இ அண்ட் ஐ (E & I) - 12, இஇ (EE) - 2 பேர், பயோலஜி/லைப் சயின்ஸ் - 1, பயோ டெக்னாலஜி - 1, பயோ மெடிக்கல் - 1, விலங்கியல் - 1 என மொத்தம் 40 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி : சூப்பிரண்டிங் என்ஜினீயர் பணிக்கு எம்இ, எம்டெக் படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது சிஜிபிஏ (CGPA) உடன் குரூப் ஏ பிரிவில் 8 ஆண்டு அனுபவத்தில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் எக்ஸிக்யூட்டிவ் என்ஜினீயர் பணி செய்திருக்க வேண்டும். அல்லது பிஇ, பிடெக் படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது சிஜிபிஏ உடன் குரூப் ஏ பிரிவில் 10 ஆண்டு அனுபவத்தில் குறைந்தப்பட்சம் 3 ஆண்டு எக்ஸிக்யூட்டிவ் என்ஜினீயர் பணி செய்திருக்க வேண்டும். ஜூனியர் டெக்னீசியன் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளேமா என்ஜினீயரிங் அல்லது பிஎஸ்சி பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : சூப்பிரண்டிங் என்ஜினீயரிங் பணிக்கு 50 வயதுக்குள் இருக்க வேண்டும். ஜூனியர் டெக்னீசியன் பணிக்கு 27 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயதுக்குள், ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், பிடபிள்யூபிடி பிரிவினர் என்றால் 10 முதல் 15 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மாத சம்பளம் : சூப்பிரண்டிங் என்ஜினீயர் பணிக்கு மாதம் ரூ.78,800 முதல் ரூ.2.09 லட்சம் வரை (லெவல் - 12) சம்பளம் வழங்கப்பட உள்ளது. ஜூனியர் டெக்னீசியன் பணிக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.19,900 முதல் ரூ.63,200 (லெவல் 2) வரை சம்பளம் என்பது வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி? : தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் 2ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் https://recruit.iitm.ac.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி, பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. இப்படி விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, திறனறி/ட்ரேட் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Read More : Lok Sabha | அதிமுகவை அதிரவைத்த தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள்..!! ஒருவேளை இப்படித்தான் நடக்குமோ..?

Advertisement