For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Job | மாதம் ரூ.60,000 வரை சம்பளம்..!! 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! தமிழக அரசில் சூப்பர் வேலை..!!

07:00 AM Mar 19, 2024 IST | 1newsnationuser6
job   மாதம் ரூ 60 000 வரை சம்பளம்     10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்     தமிழக அரசில் சூப்பர் வேலை
Advertisement

கோவை மாவட்ட சுகாதார சங்கம் ஆனது Ayush Doctor, Medical Officer மற்றும் பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இப்பணிக்கென மொத்தம் 55 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

நிறுவனம் : கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கம்

பணியின் பெயர் : Ayush Doctor, Medical Officer etc

காலிப்பணியிடங்கள் - 55

விண்ணப்பிக்க கடைசி தேதி - 20.03.2024

விண்ணப்பிக்கும் முறை - Offline

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8ஆம் வகுப்பு / 10ஆம் வகுப்பு / 12ஆம் வகுப்பு / B.Sc / BBA / BCA / BDS / BE/B.Tech / BHMS / BSMS / D.Pharm / Diploma / MBBS / Nursing என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 35, 40 மற்றும் 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.60,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.03.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : முகேஷ் அம்பானி வீட்டில் வேலை செய்பவர்களுக்கு இத்தனை லட்சம் சம்பளமா..? வேலை ஆட்களே இத்தனை பேரா..?

Advertisement