முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழ்நாட்டில் 47,000 பேருக்கு வேலை ரெடி..!! 14 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியது தமிழ்நாடு அமைச்சரவை..!!

The Tamil Nadu Cabinet has approved 14 new investment projects for an investment of Rs 38,698.80 crore.
03:05 PM Oct 08, 2024 IST | Chella
Advertisement

இன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், ’’தமிழ்நாடு அமைச்சரவை ரூ.38,698.80 கோடி முதலீட்டிற்கான 14 புதிய முதலீட்டுத்‌ திட்டங்களுக்கு ஒப்புதல்‌ அளித்துள்ளது. இதன் மூலம் 46,931 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள்‌ உருவாக்கப்படும்‌.

Advertisement

இந்த முதலீடுகள் மின்னணு துறை சார்ந்த பிரின்டெட்‌ சர்க்யூட்‌ போர்டுகள்‌, குறைந்த மின்னழுத்த பேனல்கள்‌, மொபைல்‌ ஃபோன்‌ தயாரிப்புகளுக்கான காட்சி முறை உதிரி பாகங்கள்‌, பாதுகாப்புத்‌ துறைக்கான உபகரணங்கள்‌, மருத்துவத்‌ துறை சார்ந்த ஊசி மருந்துகள்‌, தோல்‌ அல்லாத காலணிகள்‌ உற்பத்தி, எரிசக்தி துறை சார்ந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியுடன்‌ பசுமை ஹைட்ரஜன்‌ / பசுமை அம்மோனியா உற்பத்தி போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கியுள்ளது.

இராணிப்பேட்டை மாவட்டத்தில்‌ டாடா மோட்டார்ஸ்‌ லிமிடெட்‌ (ரூ.9000 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 5000 நபர்கள்‌), காஞ்சிபுரத்தில் யூசான்‌ டெக்னாலஜி பிரைவேட்‌ லிமிடெட்‌ (ரூ.13180 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 1400௦ நபர்கள்‌), தூத்துக்குடி, விருதுநகர்‌, நெல்லை, ராமநாதபுரம்‌ மற்றும்‌ திருவண்ணாமலை மாவட்டங்களில்‌ பிஎஸ்ஜி குழுமத்தின்‌ துணை நிறுவனமான லீப்‌ கீரின்‌ எனர்ஜி பிரைவேட்‌ லிமிடெட்‌ (ரூ.10375 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 3000 நபர்கள்‌) உள்ளிட்டவை முதலீட்டுத்‌ திட்டங்களாகும்‌’’ என்று தெரிவித்தனர்.

Read More : அதிமுகவில் இருந்து தளவாய் சுந்தரம் அதிரடி நீக்கம்..!! பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!!

Tags :
அமைச்சரவைக் கூட்டம்சென்னைமுதலீடுகள்வேலைவாய்ப்புகள்
Advertisement
Next Article