Job: ரூ.56,900 ஊதியத்தில் வருமான வரித்துறையில் வேலை...! 8-ம் வகுப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்
வருமான வரித்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருமான வரித்துறைக்கு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அலுவலகங்கள் உள்ளன. வருமான வரித்துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. கேண்டீன் அட்டண்டட் பணிகளுக்கு என 25 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் நபர்கள் 18 முதல் 25 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு ஊழியர்களுக்கு 40 வயது வரை உச்ச வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும்.7-வது ஊதிய கமிஷன் பே லெவல் 1-ன் படி மாதம் ரூ. 18,000 முதல் 56,900 வரை ஊதியம் வழங்கப்படும்.
தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.tnincometax.gov.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.