முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பிரபல நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! வீட்டிலிருந்தே பணிபுரிய வாய்ப்பு..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

The famous online trading company Amazon has released a new job notification.
05:03 PM Jun 21, 2024 IST | Chella
Advertisement

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

அமேசான் நிறுவனம் உலகின் மிகவும் பிரபலமான இணைய வர்த்தக நிறுவனமாகும். குறிப்பாக, இந்தியாவில் பல மாநிலங்களில் இவர்களது கிளை உள்ளது. தமிழ்நாட்டில் சென்னையில் அமேசான் நிறுவனம் அமைந்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ளவர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அமேசான் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி, தற்போது கஸ்டமர் சர்வீஸ் அசோசியேட் பணிக்கான வேலைவாய்ப்பு வந்துள்ளது. இதற்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வித் தகுதி 12ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். டிகிரி முடித்தவர்களும் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு 18-க்கு மேல் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் எழுத, பேசத் தெரிந்திருக்க வேண்டும். கம்ப்யூட்டரை கையாளத் தெரிந்திருக்க வேண்டும். வாரத்தில் அனைத்து நாட்களும் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை வேலை இருக்கும். இரவு நேரப் பணியும் உண்டு. ஷிப்ட் அடிப்படையில் வேலை செய்ய வேண்டும். தேவைப்பட்டால் கூடுதலாகவும் வேலை செய்ய வேண்டும். எந்த தொந்தரவும் இல்லாத வேலை செய்யும் இடம் இருக்க வேண்டும்.

தொடக்கத்தில் உங்களது வேலை சார்ந்த அனைத்திற்கும் பயிற்சி தரப்படும். வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பென்ஷன் வசதி, மெடிக்கல் இன்சூரன்ஸ், இன்டர்நெட் அலோவன்ஸ் போன்ற அனைத்து வசதிகள் செய்து தரப்படும். இந்த வேலைக்கான சம்பள விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்றாலும், சுமார் 35 ஆயிரத்திற்கு மேல் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. வீட்டிலிருந்தே பணிபுரிய விரும்பும் நபர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும். உடனடியாக இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Read More : பலி எண்ணிக்கை 51ஆக உயர்வு..!! இத்தனை மரணங்களுக்கு காரணமான மெத்தனால் எங்கிருந்து வந்தது..?

Tags :
Amazonjob
Advertisement
Next Article