JN1 கொரோனா வைரஸ்..!! ஒரே வாரம் தான்..!! எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் முதன் முதலில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதிலிருந்து இப்போது வரை இந்த வைரஸ் 70 லட்சம் மக்களை கொன்று குவித்துள்ளது. 70 கோடிக்கும் அதிகமானோரை பாதித்துள்ளது. இருப்பினும் இதற்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்து பெரும்பலனை கொடுத்தது. கொரோனா வைரஸ் பல்வேறு திரிபுகளை அடைந்தாலும், இந்த தடுப்பு மருந்து ஓரளவுக்கு பலன் கொடுத்தது. ஆனால், தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது.
'ஜேஎன் 1' எனும் புதிய வகை கொரோனா வைரஸ்தான் இந்த திடீர் பரவலுக்கு காரணம். கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் கண்டறியப்பட்ட இது, சீனாவிலும், சிங்கப்பூரிலும் அடுத்தடுத்து பரவியது. சிங்கப்பூரில் இது மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கேரளாவில் முதியவர் ஒருவருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் ஒரு வாரம் வரை தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கர்நாடகாவில் தொற்று பாதிப்பு தீவிரமடைந்துள்ளதால், சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவும் இதே கருத்தை தெரிவித்துள்ளர். புத்தாண்டு, பொங்கல் நெருங்கும் நிலையில், தொற்று பாதிப்பு புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.