அதிர்ச்சி செய்தி.! தமிழகத்தில் புகுந்தது புதுவகை JN-1 கொரோனா.!
தற்போது நாடு முழுவதிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை நாலாயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசின் சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு இருக்கிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு உலகையே புரட்டிப் போட்ட கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த பின் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்தது. இந்நிலையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து இந்தியாவில் கொரோனா தொற்றின் பரவல் வேகம் எடுக்க தொடங்கி இருக்கிறது.
இதுவரை இந்தியா முழுவதும் 4000 பேருக்கு புதிய தொற்று ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டு இருக்கிறது. மேலும் இந்த புதிய தொற்று பரவலால் கேரளாவைச் சார்ந்த ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது. இந்நிலையில் புதிய வகை ஜே என் 1 கொரோனா தொற்று தமிழகத்திலும் ஏற்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது
தமிழகத்தில் இந்த புதிய வகை கொரோனா தொற்று நான்கு பேருக்கு இருப்பதாக சற்று முன் தகவல்கள் வெளியாகி பொது மக்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இந்த புதிய வகை கொரோனா தொற்று இந்தியாவில் 63 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கோவாவில் 34 பேருக்கும் கேரளாவில் 6 பேருக்கும் மகாராஷ்டிராவில் 9 பேருக்கும் தமிழகத்தில் 4 பேருக்கும் இருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது. வரட்டு இருமல் மற்றும் மூக்குச்சளி ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள் ஆகும். இவை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறது.