முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வேலையை காட்ட தொடங்கிய JN 1 கொரோனா..!! 3 பேர் மரணம்..!! பீதியில் பொதுமக்கள்..!!

10:10 AM Dec 26, 2023 IST | 1newsnationuser6
Advertisement

உலக நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் JN1 கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கேரளாவைத் தொடர்ந்து கர்நாடகாவில் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 125 ஆக உயர்ந்தது. முந்தைய நாள் கர்நாடகா கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 106 ஆக இருந்தது. கர்நாடகாவில் கொரோனா பாதித்த 125 பேரில் 34 பேருக்கு JN1 கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை மொத்தம் 4170 ஆக உள்ளது.

Advertisement

ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 125, கொரோனா பாதிப்பில் குணமடைந்தவர்கள் 30, கொரோனாவால் மரணம் அடைந்தவர்கள் 3, கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் மொத்த எண்ணிக்கை 436. கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 3,155 பரிசோதனைகள் நேற்று நடத்தப்பட்டன. கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 125 பேரில் பெங்களூரில் மட்டும் 94 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மைசூரில் 13 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தனர்.

Tags :
JN 1 கொரோனா வைரஸ்இந்தியாகர்நாடகாகேரள மாநிலம்மரணம்
Advertisement
Next Article