For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

JIO-வின் அசத்தல் ரீசார்ஜ் திட்டங்கள்..!! ரூ.300-க்குள் இவ்வளவு பிளான்கள் இருக்கா..? வாடிக்கையாளர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

Now, let's see what options are available for customers looking to recharge under Rs.300.
07:34 AM Aug 27, 2024 IST | Chella
jio வின் அசத்தல் ரீசார்ஜ் திட்டங்கள்     ரூ 300 க்குள் இவ்வளவு பிளான்கள் இருக்கா    வாடிக்கையாளர்களே மிஸ் பண்ணிடாதீங்க
Advertisement

செல்போன் ரீசார்ஜ் கட்டணங்கள் சமீபத்தில் உயர்த்தப்பட்ட நிலையில், வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தற்போது, ரூ.300-க்குள் ரீசார்ஜ் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன ஆப்ஷன்கள் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

Advertisement

நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, கடந்த மாதம் ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்தது. இதனை தொடர்ந்து பிற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களான, ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களும் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தின.

ரீசார்ஜ் கட்டண உயர்வால் பலர் பி.எஸ்.என்.எல் நோக்கி படையெடுத்து வருகின்றனர். பி.எஸ்.என்.எல் குறைந்த விலையில் அதிக டேட்டா பலன்களோடு ரீசார்ஜ் திட்டங்களை வைத்திருப்பதால் பெரும்பாலானோர் BSNL-க்கு மாறி வருகின்றனர். இந்நிலையில், பழைய விலையிலேயே சில திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களை கவரும் விதமாக குறைந்த விலையில் ஜியோ வழங்கும் சில சூப்பரான "டேட்டா + அன்லிமிட்டட் வாய்ஸ் கால்" பிளான்கள் பற்றி தற்போது பார்க்கலாம்.

ரூ.198 ரீசார்ஜ் பிளான் : ஜியோவின் 198 ரூபாய் திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். வேலிடிட்டி 14 நாட்கள். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் இலவசம். தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ சினிமா, ஜியோ கிளவுட், ஜியோ டிவி உள்ளிட்ட பல கூடுதல் பலன்களும் கிடைக்கும். மேலும், 5ஜி டேட்டா அன்லிமிட்டெட்.

ரூ.199 ரீசார்ஜ் பிளான் : இது 18 நாள் வேலிடிட்டியுடன் தினசரி 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும். வரம்பற்ற அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஜியோ டிவி, சினிமா, கிளவுட் ஆகியவையும் அடங்கும்.

ரூ.209 பிளான் : 22 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 1 ஜிபி தினசரி டேட்டா கிடைக்கும். அன்லிமிட்டட் வாய்ஸ் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஜியோவின் பொழுதுபோக்கு சேவைகளை கிடைக்கும்.

ரூ.239 ரீசார்ஜ் பிளான் : 22 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தில் வரம்பற்ற வாய்ஸ் கால்கள், தினசரி 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். ஜியோவின் பொழுதுபோக்கு சேவைகளும் இந்தத் திட்டத்தில் உண்டு.

ரூ.249 பிளான் : 28 நாள் வேலிடிட்டியுடன் 1 ஜி.பி தினசரி டேட்டா வழங்கும் இத்திட்டத்தில் வரம்பற்ற வாய்ஸ் கால்கள், தினசரி 100 எஸ்எம்எஸ்கள், பொழுதுபோக்கு சேவைகள் கிடைக்கும்.

ரூ.299 பிளான் : ஜியோவின் ரூ.299 திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும். வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள், தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் மற்றும் ஜியோ டிவி உள்ளிட்ட சேவைகளும் கிடைக்கும்.

Read More : ’ஆக்டோபஸ் அண்ணாமலை மனநல மருத்துவரிடம் பரிசோதிக்க வேண்டும்’..!! கடுமையாக விமர்சித்த ஆர்.பி.உதயகுமார்..!!

Tags :
Advertisement