முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Jio New 5g Plans | ரூ.600 வரை உயர்ந்த ஜியோ ரீசார்ஜ் கட்டணம்..!! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!!

Jio has announced a hike in cell phone charges.
07:02 PM Jun 27, 2024 IST | Chella
Advertisement

செல்போன் கட்டணத்தை உயர்த்தி ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய கட்டண நடைமுறை வரும் ஜூலை மாதம் 3ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாள் ஒன்றுக்கு 1 GB Data வீதம் 28 நாட்களுக்கு வழங்கப்பட்டு வரும் பிளானின் புதிய கட்டணம் 249 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

Advertisement

கட்டண உயர்வுக்கு முன்பு இந்த பிளான் 209 ரூபாயாக இருந்தது. தற்போது, 30 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, நாளொன்றுக்கு 1.5 GB Data வீதம் 28 நாட்களுக்கு வழங்கப்பட்டு வரும் பிளானின் புதிய கட்டணம் 299 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 239 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், நாளொன்றுக்கு 2 GB Data வீதம் 28 நாட்களுக்கு வழங்கப்பட்டு வரும் பிளானின் கட்டணம் 299 ரூபாயில் இருந்து 349 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதே டேட்டா உடன் 56 நாட்களுக்கான கட்டணம் ரூ.533இல் இருந்து ரூ.629ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 84 நாட்களுக்கான கட்டணம் ரூ.719இல் இருந்து ரூ.859ஆகவும், 2.5 GB Data உடன் 365 நாட்களுக்கான கட்டணம் ரூ.2,999இல் இருந்து ரூ.600 உயர்ந்து ரூ.3,599ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வை அடுத்து ஜியோ வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Read More : ”ஆமா, எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிருச்சு”..!! அதிர்ச்சி கொடுத்த மாப்பிள்ளை..!! அதிர்ந்துபோன பெண் வீட்டார்..!! காவலர் செய்த காரியத்தை பாருங்க..!!

Tags :
Jio New 5g Plansஅம்பானிஜியோ
Advertisement
Next Article