தலையில் துண்டை போட்ட அம்பானி.. 4 மாதங்களில் 165 கோடி பயனர்களை இழந்த ஜியோ..!! மார்க்கெட் இனி BSNL கையில்..
கடந்த நான்கு மாதங்களில் 1.64 கோடி பயனர்களை ஜியோ இழந்துள்ளது. நாட்டின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், 2024ல் 55.2 லட்சம் பயனர்களை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நான்கு மாதங்களில் 1.64 கோடி சந்தாதாரர்களை இழந்துள்ளது. அக்டோபர் மாதத்தில் மட்டும் 37.6 லட்சம் பயனர்கள் ஜியோவிலிருந்து வெளியேறியுள்ளனர். ஜூலை மாதம் தனியார் துறை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அமல்படுத்திய கட்டண உயர்வால் ஜியோ பாதிக்கப்பட்டது. ஜியோ செப்டம்பர் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் முறையே 79.6 லட்சம் மற்றும் 40.1 லட்சம் பயனர்களை இழந்துள்ளது. ஜூலையில், 7.6 லட்சம் பயனர்கள் ஜியோவிலிருந்து வெளியேறினர்.
பார்தி ஏர்டெல் மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டு வந்த தருணமும் இதுவே. நிறுவனம் அக்டோபர் மாதத்தில் 19.2 லட்சம் பயனர்களை சேர்த்தது. அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் முறையே 29 லட்சம், 25.3 லட்சம் மற்றும் 8.4 லட்சம் பயனர்கள் பிஎஸ்என்எல்லில் இணைந்துள்ளனர். அக்டோபரில் சுமார் 5.1 லட்சம் பயனர்கள் பிஎஸ்என்எல்-ஐ பயன்படுத்துகின்றனர்.
BSNL இன் கட்டணங்கள் மாறாமல் இருப்பது நிறுவனத்திற்கு உதவியது. நுழைவு நிலை திட்டங்களைப் பயன்படுத்தும் பல சந்தாதாரர்கள் BSNL க்கு மாறியுள்ளனர். பிஎஸ்என்எல் அடுத்த ஆண்டு மத்தியில் ஒரு லட்சம் டவர்களுடன் தனது 4ஜி நெட்வொர்க்கை நாடு முழுவதும் வெளியிட இலக்கு வைத்துள்ளது.
தற்போது நிதி நெருக்கடியில் உள்ள வோடபோன் ஐடியா (VI) அக்டோபர் மாதத்தில் மட்டும் 19.7 லட்சம் பயனர்களை இழந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இதுவே அதிகபட்ச விகிதமாகும். கடந்த நான்கு மாதங்களில் 1.64 கோடி பயனர்களை ஜியோ இழந்துள்ளது. நாட்டின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், 2024ல் 55.2 லட்சம் பயனர்களை இழந்துள்ளது.