ஹவுரா ரயில் விபத்துக்கு இதுதான் காரணம்..!! - வெளியான முக்கிய தகவல்..
ஹவுரா-சிஎஸ்எம்டி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதை தொடர்ந்து, தற்போது விபத்துக்கான காரணம் வெளியாகியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் சக்ரதர்பூர் அருகே ஹவுரா-சிஎஸ்எம்டி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை ராஜ்கர்சவான் மற்றும் படபாம்போ நிலையங்களுக்கு இடையே ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 18 பெட்டிகள் தடம் புரண்டதில் 60 ககும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்பு குழுவினர் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ரயில் தடம் புரண்டது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விபத்து ஏன், எப்படி நடந்தது என்பது குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து நடந்த இடத்தில், ஒரு சரக்கு ரயில் ஏற்கனவே தடம் புரண்டது, அதன் பெட்டிகள் தண்டவாளத்தின் மீது கிடந்துள்ளது. ஹவுரா-மும்பை இரயில் வேறு பாதையில் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பெட்டிகள் மீது மோதியதில், எக்ஸ்பிரஸ் இரயிலின் பல பெட்டிகளும் தடம் புரண்டன. தற்போது, காயமடைந்தவர்களை ரயில்வே மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. விபத்துக்குப் பிறகு, ஹவுரா-மும்பை வழித்தடத்தில் இப்போது ரயில் சேவைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பல ரயில்கள் பாதிக்கப்படலாம்.
விபத்தை முதலில் பார்த்தவர்கள் கூறுகையில், நாங்கள் தூங்கிக் கொண்டிருந்தோம். அப்போது வழக்கம் போல் ரயில் செல்லும் சத்தம் கேட்டது. திடீரென அலறல் சத்தம் வலுவாக கேட்டது. உடனே அங்கு சென்று பார்த்தோம். பயணிகள் அங்கும் இங்கும் ஓடத் தொடங்கினர். பயணிகள் உயிரைக் காப்பாற்ற ரயிலில் இருந்து குதித்ததாக தெரிவித்தார். தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக ரயில்வே தெரிவித்துள்ளது. ஆம்புலன்ஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காயமடைந்த பயணிகள் ரயில்வே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர். இந்த பாதை தற்போதைக்கு மூடப்பட்டுள்ளது. இவ்வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன. அவர்கள் வேறு பாதையில் அனுப்பப்படுவார்கள். ரயில்வே போலீசாரும் சம்பவ இடத்தில் உள்ளனர்.
Read more ; ITR Filing 2024 | ஜூலை 31 வருமான வரி ரிட்டர்ன் தேதி நீட்டிக்கப்படுமா? – வருமான வரித்துறை சொன்ன தகவல்!!