நகைப்பிரியர்கள் செம குஷி..!! அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! இதுவே சரியான நேரம்..!!
இந்தியாவில் எப்போதும் தங்கத்துக்கு தனி மவுசு உள்ளது. தொடர்ந்து மக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வரும் சூழலில், சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்து சென்ற நிலையில், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.7 ஆயிரத்தை நெருங்கியது. இத்தகைய சூழலில் பட்ஜெட்க்கு பிறகு தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை 2024-2025 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தங்கம் இறக்குமதிக்கான சுங்கவரி என்பது 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பதாக அறிவித்தார். அவர் அறிவித்த சில மணி நேரங்களிலேயே தங்கம் விலை அதிரடியாக குறைந்தது.
இந்நிலையில், இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.400 குறைந்துள்ளதால், நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.51,320-க்கும், கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.6,415-க்கும் விற்பனையாகிறது. அதே நேரம், வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.89.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Read More : உங்கள் போனில் அடிக்கடி விளம்பரங்கள் வருகிறதா..? எரிச்சலா இருக்கா..? அப்படினா இதை பண்ணுங்க..!!