Jeff Bezos | எலான் மஸ்க்கை ஓரங்கட்டி உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார் அமேசான் நிறுவனர்..!!
உலகின் மிகப் பெரிய பணக்காரர் இடத்தை எலான் மஸ்க்கிடம் இருந்து, அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தட்டிப் பறித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனரும், ட்விட்டர் (எக்ஸ்) நிறுவனத்தின் தலைமை அதிகாரியுமான எலான் மஸ்க், கடந்த 9 மாதங்களுக்கு மேலாக உலகின் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்தை பெற்று வந்தார். ஆனால், அமேசான் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ஜெஃப் பெசோஸ் (60), தற்போது எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு பணக்காரர்களின் தரவரிசையில் ஜெஃப் பெசோஸ் முதலிடம் பிடித்தது இதுவே முதல் முறை ஆகும். நேற்று (மார்ச் 4) டெஸ்லா INC பங்குகள் 7.2% சரிந்ததை அடுத்து, ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் ஜெஃப் பெசோஸிடம் எலான் மஸ்க் தனது முதல் இடத்தை இழந்தார். எலான் மஸ்க் இப்போது 197.7 பில்லியன் டாலர்கள் நிகர மதிப்பைக் கொண்டுள்ளார். அதேபோல ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு 200.3 பில்லியன் டாலர்கள் ஆகும்.