PM MODI | "திமுகவால் ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட அவமானம்"... அம்பாசமுத்திரத்தில் கண் கலங்கிய பிரதமர் மோடி.!!
PM MODI: 2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உட்பட பல்வேறு மாநிலங்களில் நடைபெற இருக்கிறது. பொதுத் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
தென்னிந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் பிரதமர் மோடி(PM MODI) பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்று கேரளாவில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கலந்துகொண்ட அவர் ஹெலிகாப்டர் மூலமாக நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வந்தடைந்தார்.
பாஜக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி தமிழக சட்டப்பேரவையில் திமுகவினரால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு இழைக்கப்பட்ட அவமரியாதையை யாரும் மறக்க முடியாதுஎன மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
திமுக ஆளும் தமிழகத்தில் போதை பழக்கம் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் நோய் போல பரவி இருக்கிறது. இதனால் குழந்தைகளின் பெற்றோர்கள் மிகவும் கவலை அடைந்து இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தேச விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன என கூறினார்.
திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் காமராஜரை தொடர்ந்த அவமதித்து வரும் நிலையில் பாஜக காமராஜரை போன்ற ஆட்சியை இந்திய மக்களுக்கு வழங்கி வருவதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்தார். அம்பாசமுத்திரத்தை தொடர்ந்து நெல்லை கன்னியாகுமரி விருதுநகர் தூத்துக்குடி உட்பட தென் தமிழக பாராளுமன்ற தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார் பிரதமர் மோடி.