Jayalalitha | ஜெயலலிதாவின் பல கோடி மதிப்புள்ள ஆபரணங்களை தமிழ்நாட்டிற்கு அனுப்பும் உத்தரவுக்கு தடை..!! ஐகோர்ட் அதிரடி..!!
ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாட்டிற்கு அனுப்பும் உத்தரவுக்கு தடை விதித்து கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவின் அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆபரணங்களை தமிழக உள்துறை செயலாளர் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம் என பெங்களூர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்து இருந்திருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாட்டிற்கு திருப்பி அனுப்பும் உத்தரவுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. முன்னதாக தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக கட்சியின் முன்னாள் நிரந்தர பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா உள்ளிட்டோர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு நடந்து வந்த நிலையில், 2015ஆம் ஆண்டில் சிறை தண்டனை விதித்து கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கின் விசாரணையில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆபரணங்கள் கர்நாடக கருவூலத்தில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Read More : Lok Sabha | அதிமுக – தேமுதிக இடையே நாளை ஒப்பந்தம் கையெழுத்து..!! அப்படினா பாமக..?