For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

34 வயதில் ICC-ன் புதிய தலைவரானார் அமித்ஷா மகன்.. இளம் தலைவர் என்ற சாதனை..!! 

Jay Shah assumes charge as new ICC chairman, expected to lock venue for Champions Trophy soon
03:49 PM Dec 01, 2024 IST | Mari Thangam
34 வயதில் icc ன் புதிய தலைவரானார் அமித்ஷா மகன்   இளம் தலைவர் என்ற சாதனை     
Advertisement

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக ஜெய் ஷா அதிகாரப்பூர்வமாக இன்று பொறுப்பேற்றுள்ளார்.

Advertisement

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) பொதுச் செயலாளரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று அதிகாரபூர்வமாக பதவி ஏற்றார். 35 வயதான ஜெய் ஷா, மிக இளம் வயதில் ஐ.சி.சி. தலைவரானவர் என்ற சாதனையை பதிவு செய்துள்ளார்.

வகித்த பதவி : 2019 அக்டோபர் முதல் பிசிசிஐ கெளரவ செயலாளராகவும், 2021 ஜனவரி முதல் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றிய ஜெய் ஷா, இன்று (டிசம்பர் 1) முதல் ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்றார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்கிளே இருந்தார். 2020-ம் ஆண்டு நவம்பர் 24ம்தேதி அவர் அந்த பொறுப்பை ஏற்றார். நவம்பர் 30ம் தேதியுடன் அவரது 4 ஆண்டு பதவிக்காலம் முடிவுக்கு வந்தது.

இதனையடுத்து, ஐசிசி தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏற்கனவே இந்தியாவை சேர்ந்த ஜக்மோகன் டால் மியா, சரத் பவார். என்.சீனிவாசன், ஷசாங்க் மனோகர் போன்றவர்கள் ஐ.சி.சி. தலைமை பதவி வகித்தனர். அந்த வரிசையில் ஜெய்ஷாவும் இணைந்துள்ளார்.

தலைவராக பொறுப்பேற்று பேசிய ஜெய் ஷா “ஐசிசி தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன், மேலும் ஐசிசி இயக்குநர்கள் மற்றும் உறுப்பினர் வாரியங்களின் ஆதரவு மற்றும் நம்பிக்கைக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். LA28 ஒலிம்பிக் போட்டிகளுக்கு நாங்கள் தயாராகி வருகிறோம், மேலும் கிரிக்கெட்டை, உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை ஈர்க்கக்கூடியதாகவும் மாற்றுவதற்கு நாங்கள் தயாராகி வருவதால், இது விளையாட்டிற்கு ஒரு உற்சாகமான நேரம்.

பல வகையான கிரிக்கெட் போட்டிகள்  மற்றும் பெண்கள் விளையாட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டிய ஒரு முக்கியமான கட்டத்தில் நாங்கள் இருக்கிறோம் , கிரிக்கெட் உலகளவில் அபரிமிதமான ஆற்றலைக் கொண்டுள்ளது, மேலும் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி விளையாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல ஐ.சி.சி அணி மற்றும் உறுப்பு நாடுகளுடன் நெருக்கமாக பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன்" என்று கூறினார்.

Read more ; மன அழுத்தம் முதல் சளி நிவாரணம் வரை.. உள்ளங்கைகளை தேய்ப்பதில் இவ்ளோ ஆரோக்கிய நன்மைகள் இருக்கா?

Tags :
Advertisement