அடடே.! மாதவிடாய் முதல் வயிற்றுப்புண் வரை.! மணக்கும் மல்லியின் மருத்துவ நன்மைகள்.!
மல்லிகைப் பூ என்றாலே பொதுவாக அதன் வாசமும் பெண்கள் தலையில் சூடி இருப்பதும் தான் ஞாபகத்திற்கு வரும். எனினும் இந்த மணக்கும் மல்லியில் உடலுக்கு நன்மை தரக்கூடிய ஏராளமான பயன்கள் இருப்பதாக ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது. மல்லிகைப்பூ வாய்ப்புண், சிறுநீரகக் கற்கள் மற்றும் பூச்சித்தொல்லை ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது என ஆயுர்வேத மருத்துவம் குறிப்பிடுகிறது. சிலருக்கு வயிற்றில் பூச்சி இருப்பதால் உடல் எடை மெலிந்து காணப்படுவார்கள். மேலும் முகத்திலும் அவர்களுக்கு வெள்ளைத் திட்டுகள் இருக்கும். இது போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அருந்தி வர பூச்சிகள் தொல்லை முற்றிலுமாக நீங்கும்.
மேலும் மல்லிகை பூவை நிழலில் உலர வைத்து அவை நன்றாக காய்ந்த பின் பொடி செய்து நீரில் கலக்கி குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் பிரச்சனை சரியாகும். மேலும் வாய்ப்புண் மற்றும் வயிற்று புண் ஆகியவற்றிற்கும் மல்லிகை சிறந்த மருந்தாக இருக்கிறது. மல்லிகையை தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து அதனை சுண்ட காய்ச்சி காலை மற்றும் மாலை என இருவேளை குடித்து வர வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் குணமாகும். மேலும் உடலில் ஏற்படும் உஷ்ணமும் குறையும். நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களும் மல்லிகை பூவை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என ஆயுர்வேத மருத்துவம் தெரிவிக்கிறது.
மேலும் மல்லிகை பூவில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் கை கால் வீக்கம் மற்றும் உடல் வலி போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது. பெண்கள் மல்லிகை பூவை தலையில் சூடிக் கொள்வதால் அவர்களின் உடல் சூடு குறைவதோடு மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளும் நீங்கும். பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்சனை மற்றும் மாதவிடாய் கோளாறுகள் சரியாக மல்லிகை பூவை பொடி செய்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர நல்ல நிவாரணம் கிடைக்கும். மல்லிகை பூவை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர சிறுநீரக பிரச்சனைகள் மற்றும் வாயுத் தொல்லைகள் நீங்கும்.