பதவி விலகும் ஜப்பான் பிரதமர் கிஷிடா!. தேர்தலில் போட்டியிடவும் மறுப்பு!. என்ன காரணம் தெரியுமா?
Japanese PM: ஜப்பான் பிரதமர் பதவியில் இருந்து செப்டம்பர் மாதத்தில் விலகுவதாக ஃபுமியோ கிஷிடா முடிவெடுத்துள்ளார்.
ஜப்பான் பிரதமராக லிபரல் டெமாக்ரடிக் கட்சியை சேர்ந்த புமியோ கிஷிடா கடந்த 2021 அக்டோபர் 4ம் தேதி பதவி ஏற்றார். அவரது மூன்றாண்டு பதவிக்காலம் முடிவடைகிறது. ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, ஜப்பானில் விலைவாசி உயர்வு, அதிகரிக்கும் ஊழல் உள்ளிட்ட காரணங்களால் கிஷிடாவின் செல்வாக்கு குறைந்து வருகிறது.
நடப்பாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் தோல்வி, கிஷிடாவின் செல்வாக்கை பெருமளவு குறைத்து விட்டது. தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளும் கிஷிடாவுக்கு சாதகமாக இல்லை. இந்த சூழலில் செப்டம்பர் மாதம் கிஷிடாவின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என புமியோ கிஷிடா அறிவித்துள்ளார்.
புமியோ கிஷிடா வௌியிட்ட அறிக்கையில், “ கட்சி தலைவர் பதவியை மீண்டும் எதிர்பார்க்கவில்லை. கட்சி தலைவர், பிரதமர் பதவியில் இருந்து விலகினாலும், கட்சிக்கும், புதிய தலைவருக்கும் ஆதரவாக இருப்பேன்” என தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் எல்.டி.பி.யின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை மட்டுமே அவர் பிரதமர் பதவியில் நீடிப்பார். பிரதமர் பதவியில் இருந்து கிஷிடா விலக முக்கிய காரணம் கட்சிக்குள் ஏற்பட்ட தகராறே என கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஜப்பானில் அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
யூனிஃபிகேஷன் சர்ச்சுடனான தொடர்புகள் மற்றும் டிசம்பரில் அரசியல் நிதியுதவி தொடர்பான சர்ச்சையின் வெளிப்பாடுகள் காரணமாக கட்சி பெரும் இழப்பை சந்தித்துள்ளது. கிஷிடாவின் அமைச்சரவையின் அங்கீகாரமும் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. கிஷிதாவின் ஆட்சிக் காலத்தில், அவரது கட்சித் தலைவர்கள் பலர் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது, இதன் காரணமாக அவரது புகழ் 20 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
Readmore: 1916ம் ஆண்டே வடிவமைக்கப்பட்ட மூவர்ணக் கொடி!. யார் வடிவமைத்தது?. எப்போது அந்தஸ்து பெற்றது?