அக்ரிமெண்ட் திருமணம்.. அடிக்கடி உல்லாசம்.. பாலியல் சுற்றுலா மையமாக மாறிய நகரம்..!! - பின்னணி என்ன?
சுற்றுலா செல்வதில் பல வகை இருக்கிறது. ஹனி மூன் டிரிப், ஃபேமிலி டிரிப், நண்பர்களுடன் செல்வது எனப் பல வகை இருக்கிறது. அந்த வரிசையில் இப்போது செக்ஸ் டூர் பிரபலமாகி வருகிறது. இந்த பாலியல் சுற்றுலா என்பது ஒரு சிக்கலான மற்றும் சர்ச்சைக்குரிய சுற்றுலாவாகும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், தொழில்மயமான ஜப்பான், பாலியல் சுற்றுலாத் தலமாக உயர்ந்து வருவது தான். இது சமூகப் பொருளாதாரக் கூறுகளையும், வளர்ந்த நாடான ஜப்பானின் நிலைப்பாடு ஆபத்தில் உள்ளதா? என்பதையும் கேள்விக்குள்ளாக்குகிறது.
ஜப்பான் நாட்டில் பாலியல் தொழில் என்ன தான் தடை செய்யப்பட்ட ஒன்றாக இருந்தாலும் கூட இதுபோன்ற செயல்கள் அங்கு அதிகரித்தே வருகிறதாம். ஜப்பான் நாட்டில் கொரோனாவுக்கு பிறகு பொருளாதாரம் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையில், அதன் பின்னரே இந்த பிரச்சினை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்குள்ள இளம்பெண்கள் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.
ஏஜென்ஸி மூலம் செயல்படும் பாலியல் சுற்றுலா : உள்ளூர் பெண்கள் ஏஜென்சிகளுடன் தொடர்பில் இருப்பார்கள். சுற்றுலா வரும் ஆண் பயணிகள் இந்த ஏஜென்சியை அணுகுவார்கள். பயணி தரப்பும், உள்ளூர் பெண் தரப்பும் ஒப்புக்கொள்ளும்பட்சத்தில் வரதட்சணை போன்று ஒரு தொகையை அந்த ஆண் பயணி பெண்ணிடம் கொடுத்த பின்னர் அவர்களுக்கு இடையே முறைசாரா திருமணம் நடைபெறும். இதற்கு அந்த பெண், அந்த ஆண் பயணி அங்கு தங்கியிருக்கும் வரை பாலியல் ரீதியில் துணையாகவும், வீட்டு வேலையையும் செய்துகொடுக்கும் பணியாளாகவும் இருக்க வேண்டும்.
இதனை ஏஜென்சிகள் தொடர்ந்து செய்துவந்ததை அடுத்து, இது தற்போது ஒரு 'வெற்றிகரமான' தொழிலாக அங்கு மாறிவிட்டது எனலாம். இந்த குறுகிய கால திருமணங்களை "செக்ஸ் டூர்" என்றழைக்கப்படுகிறது. இது தற்போது பெரிய தொழிலாக உயர்ந்து சுற்றுலாவையும், அதுசார்ந்த உள்ளூர் பொருளாதாரத்தையும் பெருக்கி உள்ளது என கூறப்படுகிறது.
Read more ; நீரில் மிதக்கும் ரேஷன் அரிசி.. ஒருவேள பிளாஸ்டிக் அரிசியா இருக்குமோ? – உண்மை காரணம் இதோ..