ஜன. 9,10ம் தேதிகளில் UmagineTN 2025 தகவல் தொழில்நுட்ப மாநாடு!. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
UmagineTN 2025: உலக நாடுகளுக்கு இணையான தொழில்நுட்ப வளர்ச்சியை தமிழகத்தில் உருவாக்கும் முனைப்புடன் ‘யுமாஜின் 2025’ (Umagine TN) தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு வரும் ஜனவரி 9 - 10 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் நடைபெறுகிறது. தமிழக தகவல் தொழில்நுட்பவியல், டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் முன்முயற்சியில் சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற உள்ள இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
அதாவது, நாட்டிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் தான் தகவல் தொழில்நுட்பத்துக்கென தனி கொள்கை, தனி துறை, டாஸ்க் ஃபோர்ஸ், ‘தமிழ்நெட்-99’ என்று கடந்த 1997-ல் கலைஞர் ஆட்சியின்போது அத்துறையில் மாபெரும் வளர்ச்சி தொடங்கியது. நாட்டின் முதல் டைடல் பூங்காவை 2000-ஆம் ஆண்டிலேயே மறைந்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிதான் உருவாக்கினார்.
முன்னதாக, சமூக நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல் இலக்குகளை சமநிலைப்படுத்தும் அதேவேளையில், பொருளாதார வளர்ச்சியை வழங்கவல்ல தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கான நோக்கத்தை முன்னெடுப்பதற்கான ஒரு தளமாக, தொழில் நிறுவனங்களுடன் இணைந்து உலகளாவிய தொழில்நுட்ப நிகழ்வைச் சென்னையில் நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. அதன்படி, 2021-2022 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் “யுமாஜின் (UMAGINE) - வருடாந்திர தொழில்நுட்ப தலைமை உச்சி மாநாட்டை” சென்னையில் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, முதலாவது, “UmagineTN” மாநாடு 2023 ஆம் ஆண்டு மார்ச் 23 முதல் 25 வரை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
இம்மாநாடு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்) மூலம் “UmagineTN 2024” எனும் 2வது தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு கடந்த ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும், யுமாஜின் 2024 (Umagine TN) தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை தொடங்கிவைத்த, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அதன் தொடர்ச்சியாக இலவச வைஃபை திட்டத்தையும் தொடங்கிவைத்தார். அதன்படி, அனைத்து மாநகராட்சிகளிலும் 1000 முக்கிய இடங்களில் இலவச வைஃபை வசதி வழங்கும் திட்டத்தின் முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் 500 முக்கிய இடங்களில் இலவச வைஃபை வசதி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.சென்னை, கோவை, மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம் உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் 1000 முக்கிய இடங்களில் இலவச வைஃபை சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், சென்னை, சேலம், தஞ்சையில் டைடல் பார்க் அமைக்கப்பட்டுள்ளது.
Readmore: ‘சமரசமின்றி பணி தொடரட்டும்..’ சிபிஎம் புதிய மாநில செயலாளருக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து..!!