"Jan 22 புதிய யுகத்தின் தொடக்கம்".. "சத்ரபதி சிவாஜி மஹராஜ் வழிகாட்டி" - கல்கி தம் கோவில் விழாவில் மோடி பெருமிதம்.!
உத்திரபிரதேசத்தின் சம்பாலில் உள்ள இந்து ஆலயமான கல்கி தாம் அடிக்கல் நாட்டு விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அவருடன் உத்தரப் பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஸ்ரீ கல்கி தாம் நிர்மாண் அறக்கட்டளையின் தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின்போது பேசிய பிரதமர் மோடி ஜனவரி 22 அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டது இந்தியாவில் ஒரு புதிய யுகத்திற்கான தொடக்கம் என தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் இனி வரும் 1,000 ஆண்டுகளுக்கு அதன் தாக்கம் இருக்கும் என தெரிவித்தார்.
இன்று, மகான்களின் பக்தியுடனும், பொதுமக்களின் உணர்வுடனும், மற்றொரு புனித ஸ்தலத்திற்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. ஆச்சார்யர்கள் மற்றும் துறவிகள் முன்னிலையில் பிரமாண்ட கல்கி தாமுக்கு அடிக்கல் நாட்டும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது. இந்திய நம்பிக்கையின் மற்றொரு பெரிய மையமாக கல்கி தாம் உருவாகும் என்று நான் நம்புகிறேன்," என்று பிரதமர் மோடி கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி இன்று சத்ரபதி சிவாஜி மகாராஜின் பிறந்தநாள் என்பதால், இந்த நாள் மிகவும் புனிதமானதாகவும், மேலும் ஊக்கமளிப்பதாகவும் மாறுகிறது. இந்த புனிதமிக்க சந்தர்ப்பத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜின் பாதங்களில் பணிந்து அவருக்கு அஞ்சலியை செலுத்துகிறேன் என தெரிவித்தார். இன்று நம் நாட்டில் கலாச்சாரம் மற்றும் பண்பாடு குறித்து நாம் பெருமிதம் அடைகிறோம். இதற்கான உத்வேகத்தை சத்ரபதி சிவாஜி மகாராஜ் நமக்கு வழங்குகிறார் எனத் தெரிவித்திருக்கிறார்.
English Summary: Jan 22 is the marking of new era.That can make an impact on 1,000 years. Chatrapathy Shivaji maharaj is our inspiration .PM Modi speech at kalki dham foundation festival.