அவதார் 3 ஆம் பாகத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!! எதிர்பார்ப்பை எகிற வைத்த ஜேம்ஸ் கேமரூன்..
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியாகி, உலகமெங்கும் மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘அவதார்’. உலக அளவில் அதிகம் வசூலித்த படம் என்ற சாதனையை இந்தப் படம் பெற்றிருக்கிறது. இதன் அடுத்த பாகமான ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி வசூலில் சாதனை படைத்தது.
இதன் 3-ம் பாகம், 2025-ம் ஆண்டு டிச.19-ம் தேதி வெளியாகிறது. முன்னதாக படத்தின் தலைப்பை, இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் நடிகர்கள் ஜோ சல்டானா, சாம் வொர்திங்டன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். படத்துக்கு ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதுகுறித்து கேமரூன் கூறுகையில், “இதுவரை பார்த்திராத பல பண்டோராவை இதில் பார்ப்பீர்கள். தீவிரமான சாகசத்தையும் முந்தைய பாகத்தை விட அதிகமான உணர்ச்சி வெளிப்பாடுகளையும் இதில் பார்க்க முடியும். விஷுவலாகவும் சிறந்த அனுபவத்தைத் தரும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. சமூக ஊடகங்களில் புதிதாக வெளியிடப்பட்ட விளக்கப்படங்கள், ரசிகர்களுக்கு அவதார் உலகத்தின் முதல் தோற்றத்தை காட்டும் விதமாக அமைந்துள்ளது. இது புதிய நாவி பழங்குடியினர் மற்றும் பசுமையான, அன்னிய உலகத்திலிருந்து பிரமிப்பூட்டும் காட்சிகளைக் காட்டுகிறது.
இதுவரை வந்த அவதார் படங்களின் சீரிஷில் இது மேலும் சிறப்பானதாக இருக்கும் என எதிறப்பார்க்கப்படுகிறது. அதிலும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள இந்த அனைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் படம் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது. சிறப்பான பாண்டாரோ உலகிற்கு ரசிகர்களை வித்தியாசமான அனுபவத்தை அளிக்கும் என இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அவதாரின் மூன்றாம் பாகத்தில் பண்டோராவின் உலகம் எவ்வாறு வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ளது என்பதை இந்தப் படங்கள் மூலம் தயாரிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தப் பதிவைப் பகிரும் போது, 'ஜேம்ஸ் கேமரூனின் அவதாரத்தின் புதிய கான்செப்ட் ஆர்ட்: ஃபயர் அண்ட் ஆஷ் பற்றி முதலில் பாருங்கள்' என்ற தலைப்புடன் பகிர்ந்துள்ளார்.
Read more ; பட்டாசுக்கு நிரந்தர தடை விதிக்காதது ஏன்? – டெல்லி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி