முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’ஐபிஎல் போல் ஜல்லிக்கட்டு லீக் போட்டி’..!! ’வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசு வேலை’..!! அமைச்சர் உதயநிதி சொன்ன குட் நியூஸ்..!!

07:04 AM Jan 18, 2024 IST | 1newsnationuser6
Advertisement

மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலக புகழ் பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், ”ஜல்லிக்கட்டு போட்டிக்குத் தடை விதிக்க பல்வேறு அமைப்புகள் முயற்சி செய்தன. மிகப்பெரிய போராட்டத்திற்குப் பிறகு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த போட்டி.

Advertisement

ஆண்டு முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் விதமாக, ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைப் போன்று ஜல்லிக்கட்டு லீக் போட்டியை நடத்த பரிசீலித்து வருகிறோம். அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

Tags :
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்அரசு வேலைபொங்கல் பண்டிகைமதுரை மாவட்டம்ஜல்லிக்கட்டு போட்டி
Advertisement
Next Article